28.3 C
Chennai
Thursday, March 23, 2023

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா ? மறைமுகமாக நடந்த பேச்சுவார்த்தை

Date:

தொடர்புடைய கதைகள்

இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் மேக்கிங் வீடியோ இதோ...

விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவதாக முன்னதாக...

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதாவது விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்தை இயக்க ஆரம்பித்ததில் இருந்து நடிகை நயன்தாரா அதிகமாகவே மூக்கு நுழைத்தாராம்.

அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனத்தை சிபாரிசு செய்ததும் அவர்தான் அது மட்டுமல்லாமல் அஜித்திற்கு 105 கோடி வரை சம்பளம் கொடுக்க நயன்தாரா தான் காரணம் எனக் கூறப்பட்டது அது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் வெறும் கையாலு தான் நயன்தாரா தான் மெயின் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இதனால் கடுப்பான அஜித்தும் லைக்கா நிறுவனமும் விக்னேஷ் சிவனை ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. ஏகே 62 திரைப்படத்திற்கு முன்பாகவே இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் அஜித்திடம் ஒரு கதையை கூறி இருக்கிறார். அந்தக் கதை மிகவும் பிடித்து விட்டதால் மறுபடியும் அஜித் அவர்கள் மகிழ் திருமேனியை லைக்காவிடம் அந்த கதையை கூற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு இந்த கதை பிடித்து போகவே அடுத்த மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் மார்ச் 9ஆம் தேதி ஏகே 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஏற்கனவே ஏகே 62 திரைப்படத்தில் நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், சாய் பல்லவி, இவர்களில் ஒருவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நயன்தாராவும் கிடையாது திரிஷாவும் கிடையாது என்பது போல வேறொரு நடிகை களத்தில் இறக்கி இருக்கிறார் அஜித் இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படத்தில் அஜித்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தற்போது இந்திய 2 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் மறுபடியும் அஜித் உடன் இணை இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் இது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் வேறு யாரும் இல்லை விஜய் சேதுபதிக்கு சில்பா என்ற கதாபாத்திரத்தை கொடுத்த தேசிய விருது வாங்கும் வரை அழைத்துச் சென்ற இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்தான் 63 படம் உருவாக்கப் போவதாக இப்போ கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தல அஜித்தின் கேரியரில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தியாகராஜன் குமாரராஜா இதுவரை ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என்ற இரண்டு படங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ஆனால் இந்த இரண்டு படங்களுமே ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்து உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தல அஜித் ஏற்கனவே சொன்னது போல் இனிமேல் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை குறைத்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க முடிவு செய்துவிட்டார் என்பது இதில் இருந்து தெரிகிறது.

சமீபத்திய கதைகள்