28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

ஹாட்ரிக் வெற்றி வசூல் வேட்டையாடிய வினோத்-அஜித் கூட்டணி! 3 படங்களின் மொத்த வசூல் ரிப்போர்ட்

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

அஜீத் குமார் நடித்த ‘துணிவு’, திரையரங்குகளில் ஓடியதைத் தொடர்ந்து OTTயில் ஒளிபரப்பாகிறது. வங்கி திருட்டைப் பற்றிய இந்த படம் நெட்ஃபிக்ஸ் இல் கிடைக்கும் என்று வதந்திகள் வந்துள்ளன, மேலும் ஸ்ட்ரீமிங் சேவை இப்போது வெளியீட்டு தேதியை அறிவிப்பதன் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. அஜித்குமார் இறுதியாக வந்துவிட்டார், எனவே வெடிப்புகள் தொடங்குவதற்கான நேரம் இது என்று நெட்ஃபிக்ஸ் செய்தியை அறிவிக்கும் ஒரு இடுகையில் எழுதியது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வினோத் மூன்றாவது படத்திலேயே அஜித்துடன் இணைந்தார். போனி கபூர் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் இணைந்த இவர்களின் கூட்டணி அடுத்தடுத்த திரைப்படங்களிலும் வெற்றி வாகை சூடியது.

நேர் கொண்ட பார்வை திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஹிந்தியைப் போல தமிழிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது. அந்த வகையில் உலக அளவில் இப்படம் 215 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது. அதை தொடர்ந்து இந்த கூட்டணி வலிமை திரைப்படத்தில் இணைந்தது.

ஆக்சன் திரில்லர் கலந்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் பல வருடங்கள் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஊரடங்கு தான். இந்த தடைகளை எல்லாம் கடந்து வலிமை திரைப்படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது.

அஜித் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஏங்க வைத்த இந்த திரைப்படம் வசூலிலும் சோடை போகவில்லை. அந்த வகையில் உலக அளவில் வலிமை திரைப்படம் 250 கோடி வரை வசூலித்தது. அதைத்தொடர்ந்து மூன்றாம் முறையாக வினோத், அஜித் கூட்டணி துணிவு திரைப்படத்தின் மூலம் கைகோர்த்தனர்.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான அந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இப்படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் நேரடியாக மோதியதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் துணிவு திரைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடப்படும் வகையில் அதில் புதிரி ஹிட் அடித்தது.

அந்த வகையில் துணிவு இப்போது வரை 350 கோடி வசூலித்திருக்கிறது. மேலும் தியேட்டரில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்தில் கூட துணிவு திரைப்படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த மூன்று படங்களும் உலக அளவில் 815 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டுள்ளது. இதுவே அஜித்தின் அடுத்த படத்திற்கான உச்சகட்ட எதிர்பார்ப்பையும் தூண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத் தயாரிப்பாளர் எச் வினோத் எழுதி இயக்கிய இந்தப் படம், நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம். அஜித்தால் திட்டமிடப்பட்ட வங்கிக் கொள்ளை மற்றும் அதற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் சங்கிலியைச் சுற்றி படம் சுழல்கிறது.

துனிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூரின் ஆதரவுடன், துனிவு படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்