Monday, April 22, 2024 1:34 pm

லியோ படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை! வெளியான அதிர்ச்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்திற்கு பிறகு அவர் எடுத்த படம் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் தான் அதிலும் குறிப்பாக கடைசியாக கமலை வைத்து லோகேஷ் எடுத்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது அந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் விஜய் கைகோர்த்து லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் இரவு, பகல் பார்க்காமல் எடுக்கப்பட்டு வருகிறது. லியோ திரைப்படத்தில் விஜய், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிக் பாஸ் ஜனனி..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இதில் இயக்குனர் மிஷ்கினுக்கு மட்டுமே அவருடைய காட்சிகள் முழுமையாக முடிக்கப்பட்டு படத்திலிருந்து வெளியேறி இருக்கிறார் மற்றவர்கள் அனைவரும் மைனஸ் டிகிரி கடும் குளிர் என்று கூட பார்க்காமல் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்தாலும் இந்த திரைப்படத்தில் இன்னும் இரண்டு, மூன்று பிரபலங்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பாக விக்ரம் படத்தில் ஹீரோவாக நடித்த கமல் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த சூர்யா ஆகியவர்கள் லியோ திரைப்படத்தில் இணைவார்கள் என பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டன.

இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் எடுத்துள்ள முடிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது அதாவது லோகேஷ் கமலை லியோ திரைப்படத்தில் நடிக்க வைக்க வாய்ப்பே இல்லையாம் இதுவரை கமலிடம் அது பற்றி அவர் பேசவே இல்லை 200% லியோ திரைப்படத்தில் கமல் நடிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. பொறுத்து இருந்து பார்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..

- Advertisement -

சமீபத்திய கதைகள்