28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பிரபல நடிகர் எடுத்த அதிர்ச்சி முடிவு !! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62-வை இயக்கவிருந்தார் விக்னேஷ் சிவன்.ஆனால், அஜித் – லைகா தரப்பில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு திடீரென ரெட் சிக்னல் கொடுக்கப்பட்டது.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து துவண்டுவிடாமல் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கிய விக்கி, விஜய் சேதுபதிக்காக பக்கா ப்ளான் போட்டு வைத்துள்ளாராம்.

சிம்புவின் போடா போடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் வெளியான பிறகே பிரபலமானார். விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் இந்தப் படத்தின் ஷூட்டிங் போதுதான் விக்கியும் நயனும் காதலிலும் விழுந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா, கூடுதலாக சமந்தா கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார் விக்கி.

கடந்தாண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆனார் விக்கி. இடையே நயனுடன் திருமணம், இரட்டை குழந்தைகள் என மகிழ்ச்சியில் இருந்த விக்கிக்கு, திடீரென அதிர்ச்சி கொடுத்தது ஏகே 62 டீம். அஜித், லைகா இரண்டு தரப்புக்கும் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக, விரக்தியாகிவிட்டார் விக்கி.

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கிவிட்டால் கோலிவுட்டில் இன்னும் ஒரு ஸ்டெப் மேலே போய்விடலாம் என நினைத்த விக்கிக்கு, இது ஷாக்கிங் மேல் ஷாக்கிங்காக அமைந்தது. இதனால் துவண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு சப்போர்ட்டாக நயன்தாரா களமிறங்கியுள்ளாராம். ஏகே 62 ரிலீஸாகும் முன்பே விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக விஜய் சேதுபதியை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளாராம் நயன். அவரும் நயனுக்காக ஓக்கே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மட்டும் இல்லாமல், பிரதீப் ரங்கநாதனும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார் விஜய் சேதுபதி. ஆனால், அங்கே சம்பளப் பிரச்சினை இருந்ததால், அதனை தெரிந்துகொண்ட நயன் விஜய் சேதுபதிக்கு பல கோடிகளை கொடுத்து விக்னேஷ் சிவன் படத்தில் லாக் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை சுந்தர் சியும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்க ரெடியாகிவிட்டாராம் விக்னேஷ் சிவன்.

ஏற்கனவே நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் விக்னேஷ் சிவனுக்காக கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த முறை நயனுக்காகவும் விக்கியுடன் இணைய ஓக்கே சொல்லியதாக தெரிகிறது. இந்தப் படத்தை ஹிட் கொடுத்தால் மட்டுமே விக்னேஷ் சிவனும் ஃபீல்டில் நீடிக்க முடியும் என்பதால், நயன்தாராவையே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைக்க விக்கி முடிவு செய்துவிட்டாராம். முன்னதாக அஜித்தின் ஏகே 62 வாய்ப்பும் நயன்தாராவால் தான் விக்கிக்கு கிடைத்ததாக சொல்லப்பட்டது.

இதனிடையே இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் மட்டும் நடித்துவந்த விஜய் சேதுபதி, முதன்முறையாக கன்னடத்திலும் அறிமுகமாகவுள்ளாராம். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் உப்பென்னா படம் மூலம் வில்லனாக அறிமுகமான விஜய் சேதுபதி, இப்போது கன்னடத்திலும் வில்லனாக என்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்