Thursday, March 30, 2023

அஜித் 62 படத்தின் ஹீரோயின் இவரா ? இறுதியில் நடந்த மாற்றம்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

ஏகே 62 படத்திற்கு முதன் முதலில் பிரச்சனை ஆரம்பித்ததே ஹீரோயின் விவகாரத்தில் தான் என்கின்றனர்.இந்நிலையில், கடைசி வரை அந்த குழப்பம் இன்னமும் தீரவில்லை என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்க கமிட் ஆகி பின்னர் வேண்டாம் என முடிவெடுத்த நடிகர் அஜித், அதை போல ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட சில இயக்குநர்களின் படங்களில் கமிட் ஆகி கடைசி நேரத்தில் வெளியேறி உள்ளார்.

ஆனால், அதெல்லாம் அப்போ பாஸ், இப்போ எல்லாம் அப்படி இல்லை என சொல்லி வந்த பலருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக மீண்டும் அப்படியொரு சம்பவம் சமீபத்தில் நடந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆரம்பத்தில் நடிகை நயன்தாராவால் தான் அஜித் படத்தை தயாரிக்கும் வாய்ப்பே லைகா நிறுவனத்துக்கு சென்றது என்றும் 105 கோடி ரூபாய் சம்பளத்தை அஜித்துக்கு லைகா வழங்க காரணமே நயன்தாரா தான் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், கடைசியில் நயன்தாராவின் அதீத தலையீடு தான் விக்னேஷ் சிவனை அஜித் படத்தில் இருந்து நீக்குவதற்கே காரணமா? என்றும் சர்ச்சைகள் வெடித்தன

விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்த அஜித் நயன்தாரா மட்டும் ஹீரோயினாக வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம். ஏற்கனவே வில்லு படத்தில் கவனம் செலுத்தாமல் பிரபுதேவா உடன் நயன்தாரா செய்த லூட்டியால் தான் அந்த படம் பாதிக்கு மேல் ரூட் மாறி சென்று தோல்வி அடைந்தது என்கிற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு நயன்தாராவுடன் அவரது கணவருக்கு முன்பாகவே டூயட் பாடினால் நல்லா இருக்காது என்பதால் நயன்தாரா வேண்டவே வேண்டாம் என சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாராவுக்கு பதில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராயின் பெயர் அடிபட்டது. அதன் பின்னர், கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. கடைசியாக சாய் பல்லவி வரை பல பெயர்கள் அடிபட்டும் ஒவ்வொரு ஹீரோயினாக ஃபிக்ஸ் செய்ய முடியாத நிலையில் தான் இயக்குநரை மாற்ற வேண்டிய சூழலே உருவானது என்றும் சில தகவல்கள் வெளியாகின.

விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து வெளியேறுகிறார் என்றதுமே ஏற்கனவே மகிழ் திருமேனி அஜித்துக்கு ஒரு கதை சொல்லி இருந்த நிலையில், அதனை மீண்டும் லைகா மற்றும் அஜித் கேட்க, இந்த படத்தில் மகிழ் திருமேனியையே இயக்குநராக போட்டு விடுங்கள் என அஜித் சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.

ஆனால், அதே ஹீரோயின் சிக்கல் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு காலதாமதம் ஆகிறது என்கின்றனர். பொன்னியின் செல்வன், ராங்கி என தொடர்ந்து லைகாவுடன் பயணித்து வரும் த்ரிஷா பெயரும் அப்போதிலிருந்தே அடிபட்டு வருகிறது. மேலும், ஸ்ருதிஹாசனும் பிரபாஸின் சலார் படத்தை முடித்து விட்ட நிலையில், இந்த படத்தில் அவரை புக் செய்யலாமா என்கிற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

ஆனால், லேட்டஸ்ட் தகவலாக கடைசியில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலை அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் ஒப்பந்தம் செய்யலாமா என்கிற சிபாரிசை லைகா தரப்பு வைத்துள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே அஜித் உடன் இணைந்து விவேகம் படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்த நிலையில், மீண்டும் அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஏகே 62 படத்தில் யார் தான் அஜித்துக்கு ஜோடி என்கிற சிக்கல் நிலவி வரும் நிலையில், மார்ச் 9ம் தேதி வியாழக்கிழமை ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட லைகா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

வெளிப்படையாக, அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

சமீபத்திய கதைகள்