28.3 C
Chennai
Thursday, March 23, 2023

திரையுலகில் மேலும் ஒரு உயிரிழப்பு! முக்கிய பிரபலம் திடீர் மரணம் !கடும் சோகத்தில் ரசிகர்கள்

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக தொடர் மரணங்கள் இடம்பெற்று வருகின்றன. ஒவ்வொருவருடைய இழப்பும் பேரிழப்பாகவே மாறி இருக்கின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த மயில்சாமியின் மரணம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்கு முன்பாகவே தற்போது மலையாள சினிமாவிலும் ஓர் மரணம் இடம்பெற்றுள்ளது. அதாவது பிரபல இயக்குநரான மனு ஜேம்ஸ் இன்று 31ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

இவர் 2004-ஆம் ஆண்டு வெளியான ‘ஐ ஆம் க்யூரியஸ்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் வளர்ந்ததும் மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

இவர் தற்போது தனது கனவுப்படமான ‘நான்சி ராணி’ என்ற படத்தை இயக்கி வருகின்றார். இப்படமானது இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாகவே அபபடத்தின் இயக்குநர் மனு ஜேம்ஸ் மரணமடைந்துள்ளார். அதாவது அவர் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவரின் திடீர் மறைவானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உட்படப் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய கதைகள்