Friday, March 31, 2023

துரோகத்தின் வெளிப்பாடு தான் அஜித்தின் தற்போதைய நிலை பற்றி கூறிய பிரபலம் !!

தொடர்புடைய கதைகள்

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தைப் பார்த்து சூரி மற்றும் விஜய் சேதுபதியைப் பாராட்டிய அல்போன்ஸ்

தமிழில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது....

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் அஜித் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதில் பயணித்து வருகின்றார். தன் ரசிகர்கள் தனக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதை விரும்பாத அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தார். எந்த ஒரு நடிகரும் செய்யாத காரியத்தை அஜித் துணிச்சலாக செய்தார்.

இது அவரின் மீதான மரியாதையை பலமடங்கு உயர்த்தியது. இதைத்தொடர்ந்து தன்னை தல என அழைக்கவேண்டாம் அஜித் என்று அழைத்தாள் போதும் என அறிக்கை விட்டார். இதுபோல விழாக்கள், பொதுமேடைகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருந்து முழுவதுமாக விலகி தான் உண்டு தான் வேலை உண்டு என இருந்து வருகின்றார் .

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில் அஜித் பற்றி பேசியது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

அவர் கூறியதாவது, ஆசை படத்தின் போதே அஜித்தும் நானும் நல்ல நண்பர்களாக பழகினோம். அப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் பைக்கில் தான் வருவார். அவரும் நானும் பைக்கில் பல முறை ஒன்றாக சென்றுள்ளோம்.

ஆசை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு வாலி படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் தான் என் மகனை நான் பள்ளியில் சேர்த்தேன். பள்ளியில் இடம் கிடைத்தும் என்னால் என் மகனின் பீஸை கட்டமுடியவில்லை. உடனே நான் அஜித்திடம் இந்த விஷயத்தை சொன்னேன்.

அவர் தான் என் மகனுக்கு பீஸ் காட்டினார். அதுமட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு வரை என் மகனுக்கு அனைத்து பீஸையும் அஜித் தான் காட்டினார். இந்த உதவியெல்லாம் நான் மறக்கவே மாட்டேன். ஆனால் தற்போது அஜித் மிகவும் மாறிவிட்டார்.

சினிமா துறையில் சந்தித்த துரோகங்கள் காரணமாக ஜாலியாக இருந்த அஜித் தற்போது மிகவும் இறுக்கமாக மாறிவிட்டார். இருப்பினும் வெளியில் தெரியாமல் பல உதவிகளை அஜித் செய்து வருகின்றார் என மாரிமுத்து கூறியதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கதைகள்