28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

அஜித்துக்குகாக அருண்விஜய் எடுத்த அதிரடி முடிவு !! லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும்

ஆரம்ப காலகட்டத்தில் தோல்வி திரைப்படங்களை கொடுத்து தடுமாறினாலும் இப்போது அருண் விஜய் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இப்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதில் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் நடித்து வந்த சூர்யா சில பிரச்சினைகளின் காரணமாக விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இப்போது அருண் விஜய் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்க்காத அவரும் இப்படத்தில் நடிக்க சந்தோஷமாகவே சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு புது சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறது. அதாவது அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவும் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த வேலைகளில் பட குழு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அருண் விஜய் இருக்கிறாராம். ஏற்கனவே இவர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்திருக்கிறார். அப்படி இருந்தும் கூட இந்த வாய்ப்பை ஏற்பதில் அவர் தயக்கம் காட்டி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான்.பொதுவாகவே பாலா தன் படத்தில் ஒரு ஹீரோவை கமிட் செய்து விட்டால் மற்ற படங்களில் அவரை நடிக்க விடமாட்டார். அதிலும் அருண் விஜய்க்கு அஜித் படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் நிச்சயமாக அவர் அனுமதிக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் பாலா மற்றும் அஜித் இருவருக்கும் இடையே ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்தது.இந்நிலையில் அஜித்துக்க்காக பாலா திரைப்படத்தை விட்டுவிடுவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன

அந்த வகையில் இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் அருண் விஜய் மதில் மேல் பூனையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் இந்த இரண்டு படங்களுமே அவருடைய கேரியருக்கு உறுதுணையாக இருக்கும். அதனால் அவர் தற்போது என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறாராம். இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதற்காக அருள்நிதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படையாக, அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

சமீபத்திய கதைகள்