Saturday, April 1, 2023

மறைந்த மயில்சாமி அஜித்தை பற்றி மனம் உருகி பேசிய வீடியோ வைரல் !!

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

மகிழ் திருமேனி இயக்கத்தில் கோலிவுட் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம் #AK62 மார்ச் 1-ம் தேதி முதல் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக நேற்று தெரிவித்திருந்தோம். இதற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் பிரமாண்ட செட் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன் தன் இறப்பின் மூலம் தமிழ் சினிமாவிற்கே சோகத்தை விட்டுச் சென்ற நடிகர் மயில்சாமி. அவர் இருக்கிற வரைக்கும் அவர் செய்த உதவிகள் வெளியில் தெரியாமல் இருந்தன. ஆனால் அவர் மறைவிற்கு பின் மனுஷன் இப்படியெல்லாமா இருப்பாரு? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு பல பேருக்கு உதவிகளை செய்து விட்டு சென்றிருக்கிறார்.

அவர் நினைத்ததை அவர் செய்ய விரும்பியதை இனி நான் ஏற்று செய்வேன் என்று அவர் மகன் கூறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. வீட்டிலேயே இருக்கமாட்டாராம் மயில்சாமி. வெளியில் சாதாரண மக்களோடு மக்களாக யாருக்காவது உதவி தேவைப்படுகிறதா என்ற நோக்கிலேயே தான் சுற்றிக் கொண்டிருப்பாராம்.

இப்பொழுது அவரைப் பற்றிய பல வீடியோக்கள் வைரலாகி வருகின்ற நிலையில் ஒரு சமயம் அஜித்தை பற்றி மயில்சாமி உருகி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகின்றது. அஜித்துடன் ‘வேதாளம்’, ‘வீரம்’ போன்ற சில படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் மயில்சாமி. படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் தான் கண்ட அந்த நல்ல விஷயம் என்ன என்பதை கூறியிருக்கிறார்.

படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் மயில்சாமி ‘சார் எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவருக்கும் உங்களை பிடித்திருக்கிறது’ என்று கூறினாராம். ஆனால் அஜித் இதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினாராம். மேலும் ‘உண்மையிலேயே சார், உள்ள இருக்கிற உங்களுக்கு தெரியாது, வெளியில் இருந்து பார்க்கிற எனக்குத் தான் தெரியும், அத்தனை பேருக்கும் பிடிக்கிறது ’ என்று கூறினாராம்.

இவர் சொன்ன இரண்டு மாதங்கள் கழித்து நடிகர் சோ வும் இதே கருத்தை தான் பேட்டியில் கூறினாராம். அதனை தொடர்ந்து போஸ்டரிலும் ரசிகர்கள் ஒரு சைடு எம்ஜிஆர் புகைப்படம் மறு சைடு அஜித் புகைப்படம் என போஸ்டரில் விளம்பரம் பண்ணியிருந்தார்களாம். அதை பார்த்ததும் மயில்சாமிக்கு அப்படி ஒரு சந்தோஷமாம். தான் சொன்னது அப்படியே நடக்கிறது என்று ஆனந்தப்பட்டாராம்.

மேலும் அஜித்தை பற்றி அவர் கூறியது ‘அஜித் எத்தனை பேருக்கு உதவிகளை செய்து வருகிறார். ஆனால் அதை இன்று வரை அவர் விளம்பரப்படுத்தவில்லை, தான் தான் செய்தோம் என்றும் சொன்னதில்லை’ என்று அஜித்தை பற்றி உருகி பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. ஆனால் அவர் மறைவிற்கு அஜித் உட்பட பல முன்னனி நடிகர்கள் வராதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தின் இயக்குநராக லாக் செய்யப்பட்டபோது, படம் மும்பை பின்னணியில் இருக்கும் என்று செய்திகள் வெளியாகின. இப்படத்தில் இரண்டு குழந்தைகளுடன் நடுத்தர வயதுடையவராக அஜீத் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. சந்தானம், அரவிந்த் சாமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். காரணம் எதுவாக இருந்தாலும், AK62 இயக்குநரின் மாற்றம் திரைக்கதையில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது. அனிருத் இசையமைப்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

சமீபத்திய கதைகள்