28.9 C
Chennai
Sunday, March 26, 2023

AK62 நீங்க நினைக்கற மாதிரி இருக்காது !! மீண்டும் உண்மை சம்பவத்தை கையில் எடுத்த அஜித் !!

Date:

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் நீண்ட ஷெட்யூல்...

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பதில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி AK62 படத்தை இயக்கவுள்ளார், மேலும் இந்த திட்டத்தின் பூஜை நேற்று லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களுடன் நடந்தது. ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெளியிடப்படாத காரணங்களால் படத்தயாரிப்பாளர் திட்டத்தில் இருந்து விலகினார்.

அஜித் நடிக்கும் ஏகே 62 பட அப்டேட் மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக விக்னேஷ் சிவன் இயக்குவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.இந்நிலையில், ஏகே 62 அப்டேட் டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது.

அதேபோல், இந்தப் படத்திற்கு டெவில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது இதுகுறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களை துணிவு மூலம் தூக்கி அடித்தது அஜித் – அ வினோத் கூட்டணி. துணிவு படம் கொடுத்த புத்துணர்ச்சியால், ஏகே 62 ஷூட்டிங் செல்ல ரெடியாகிவிட்டார் அஜித். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்படுகிறது.

அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி குறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை. அதனால் விரைவில் லைகா தரப்பில் இருந்து நல்ல செய்தி வரும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்யின் லியோ அப்டேட் போன்று, ஏகே 62 படத்திற்கான டைட்டில் ப்ரோமோவும் வெளியாகும் என்றே சொல்லப்பட்டது. ஆனால், டைட்டில் ப்ரோமோவிற்கான ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்பதால், விரைவில் ஏகே 62 தலைப்பை மட்டும் அறிவிக்க படக்குழு முடிவுசெய்துள்ளதாம்.

இனிமேல் டைட்டில் ப்ரோமோ ஷூட் செய்தால் இன்னும் லேட் ஆகும் என்பதால், ஏகே 62 போஸ்டரை மட்டும் வெளியிட அஜித் அவசரம் காட்டுகிறாராம். லைகாவும் வேறுவழியில்லாமல் ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது. இதனிடையே சென்னையில் நடைபெற்ற ஏகே 62 பூஜையில், மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து உடனே ஏகே 62 அப்டேட் வெளியானதும் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ரெடியாகிவிட்டதாம்.

முக்கியமாக ஏகே 62 படத்திற்கு டெவில் என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. துணிவு படத்தில் டார்க் டெவில் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் அஜித். தற்போது அந்த டெவில் என்ற பெயரையே ஏகே 62 டைட்டிலாக வைத்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் உண்மை இல்லை என்றே கூறப்படுகிறது. மகிழ் திருமேனி தனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதையே விரும்புவார். அதனால் ஏகே 62 படத்துக்கு டெவில் என்ற டைட்டில் வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.

அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஏகே 62 படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகியுள்ளார்களாம். மார்ச் மாதம் தொடங்கும் ஏகே 62 ஷூட்டிங் இரண்டு அல்லது மூன்றே ஷெட்யூல்களில் விரைவாக முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதனால், இந்தாண்டு இறுதிக்குள் ஏகே 62 படத்தை வெளியிட லைகா முடிவுசெய்துள்ளதாம்.

படத்தின் நடிகர்கள் மற்றும் வகை பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மார்ச் மாதத்தில் திட்டத்தின் தலைப்பு அறிவிப்புடன் அவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனி கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘கலக தலைவன்’. தீய கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போரிடும் ஒரு விழிப்புணர்வின் பயணத்தைத் தொடரும் திரில்லர்.

  • குறிச்சொற்கள்
  • AK62

சமீபத்திய கதைகள்