சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை குடும்பத்துடன் சென்றதாக தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினருடன் கோயிலுக்குச் சென்றார். அவரது வருகையையொட்டி கடலூர் மற்றும் சிதம்பரத்தில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.