Tuesday, June 18, 2024 6:37 pm

அஜித் எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.ஏகே 62 என்பது லைகா புரொடக்ஷன்ஸின் திட்டமாகும், மேலும் இது ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமாக இருக்கும். இப்படம் ஜனவரி இறுதியில் இருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது, இப்போது படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பூஜை பிப்ரவரி 20ஆம் தேதி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

ஏகே 62 படத்துக்கு பிறகு அஜித்குமார் ஓய்வு எடுக்கப்போவதாகவும் அதனால்தான் இந்தப் படத்தின் மீது அவரது கவனம் அதிகம் குவிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.நேர்கொண்ட பார்வை, வலிமை படஙக்ளுக்கு பிறகு அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் துணிவு படம் மூலம் இணைந்தது. இவர்கள் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் துணிவு படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனால் அஜித் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

துணிவு படம் நடித்துக்கொண்டிருக்கும்போதே அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் திடீரென படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். விக்கி சொன்ன கதை ஒழுங்காக இல்லாததால் அவர் நீக்கப்பட்டார் என கூறப்பட்டது.

இதனையடுத்து ஏகே 62 படத்தை விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ், மகிழ் திருமேனி உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் இயக்குவார் என தகவல் வெளியானது. ஒருவழியாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குநராக லாக் செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப பொழுதுபோக்குடன் ஒரு கதையும், ஆக்ஷன் கதையும் மகிழ் திருமேனி கூறியதாகவும் அதில் ஆக்ஷன் கதை டிக் அடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

மகிழ் திருமேனி இயக்குநராக உறுதி செய்யப்பட்டாலும் அதுகுறித்த எந்த அறிவிப்பையும் தயாரிப்பு தரப்பு வெளியிடாமல் இருந்து வருகிறது. அதற்கு காரணமாக, முதலில் இயக்குநரை மற்றும் அறிவிக்காமல் தலைப்புடன் சேர்த்து இயக்குநரை அறிவிக்கலாம் என லைகா திட்டமிட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி லியோ போல் ப்ரோமோவுடன் படத்தின் முதல் அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக எந்தப் படத்தின் உள் வேலைகளிலும் அஜித் கலந்துகொள்ளமாட்டார். தன்னுடைய வேலை நடிப்பது என்பதோடு நிறுத்திக்கொள்வார். ஆனால் துணிவு கொடுத்த வெற்றி அவரை கூடுதல் உற்சாகப்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள். எனவே ஏகே 62 கதையில் நிச்சயம் ஏதேனும் பிரமாண்டம் இருக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டரை இயக்குநர் தரப்புக்கும், தயாரிப்பு தரப்புக்கும் அஜித் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் இந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டருக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் ஒன்று இப்போது கசிந்துள்ளது. அதாவது, இந்தப் படத்துக்கு பிறகு இரண்டு வருடங்கள் சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் அஜித். எனவே தான் நடிக்காமல் இருக்கப்போகும் இரண்டு வருடங்களுக்கும் பேசும் அளவு இந்தப் படம் இருக்க வேண்டுமென அஜித் விரும்புகிறாராம். மேலும் இந்த இரண்டு வருடங்களில் அவர் ஏகப்பட்ட பைக் ரைடுகளை செய்யப்போவதாகவும் கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.

கிரீடம் (ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள்), பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உட்பட பல முறை அஜித் படத்தில் நீரவ் ஷா பணியாற்றியுள்ளார். விவேகம் படத்திற்கு பிறகு ஏகே 62 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் வெளிப்படையாக, அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்