அஜீத் குமாரின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்ற யூகங்களுக்கு மத்தியில், தற்போது நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதியை படத்திற்காக அணுகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி, அஜித் கூட்டணி உறுதியான நிலையில் படம் குறித்து அப்டேட் காலை முதலே இணையத்தை சூழ்ந்து உள்ளது. அதாவது பிரம்மாண்டமாக லைக்கா தயாரிக்கும் ஏகே 62 படத்தில் இசையமைப்பாளராக அனிருத்தை தேர்வு செய்து உள்ளனர். அதேபோல் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில் மகிழ்திருமேனியின் ஆஸ்தான ஹீரோவான அருண் விஜய் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். தடம், தடையறத் தாக்க போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை அருண் விஜய்க்கு மகிழ் தான் கொடுத்து இருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் சுமூக நட்பு இருந்து வரும் நிலையில் ஏகே 62 படத்திலும் அருண் விஜய் நடிக்க வைக்க மகிழ் திட்டமிட்டு இருந்தார்.
அஜித்துக்கு வில்லனாக ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். இப்போது இவருக்கு போட்டியாக மற்றொரு நடிகரும் ஏகே 62 படத்தில் களமிறங்க உள்ளார். இந்த வாய்ப்பு அந்த நடிகருக்கு உதயநிதியால் தான் கிடைத்தது. அவர் வேறு யாருமில்லை உதயநிதியின் சகோதரர் அருள்நிதி தான்.
மகிழ்திருமேனியின் கடைசி படமான கலக தலைவன் படத்தில் உதயநிதி தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டதால் அஜித், உதயநிதி இடையே நல்ல நட்பு உள்ளது. மேலும் அருள்நிதிக்கு எப்படியாவது அஜித் படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.
இதனால் உதயநிதியிடம் ஏகே 62 வாய்ப்பு வாங்கி தருமாறு அருள்நிதி கேட்டுக்கொண்டு உள்ளார். அதன்படி அஜித் மற்றும் மகிழ்திருமேனியிடம் தனது சகோதரருக்காக சிபாரிசு செய்து அருள் நிதியை ஏகே 62 படத்தில் நடிக்க ஒப்பந்தம் வாங்கிக் கொடுத்துள்ளார் உதயநிதி. சமீபகாலமாக அருள்நிதி திரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதிலும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய டிமான்டே காலனி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவருடைய பல வருட கனவு, அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை அருள்நிதி பெற்றுள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.
முன்னதாக லைகா புரொடக்ஷன்ஸ் ஆதரவுடன் ஏகே 62 அறிவிக்கப்பட்டது என்பதும், அதன் தலைமையில் விக்னேஷ் சிவன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் கிடப்பில் போடப்பட்டதா அல்லது மேலும் தேதிக்கு தள்ளப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.
அஜித் கடைசியாக எச் வினோத் இயக்கிய துணிவு படத்தில் நடித்தார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தற்போது நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.