லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘ஏகே 62’ படத்திற்கு முதலில் விக்னேஷ் சிவன் இயக்குநராக இருந்தார், ஆனால் படைப்பு வேறுபாடுகள் காரணமாக அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கப்பட்டார் என்பது இரகசியமல்ல. இப்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தி என்னவென்றால், ‘கலக தலைவன்’ தயாரிப்பாளர் ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கி, படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். முதலில் ஒப்பந்தமாகியிருந்த அனிருத் ரவிச்சந்தருக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக களமிறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏகே 62 வேலைகள் தொடங்கியதில் இருந்தே நடிகர் அஜித் இந்த படத்தின் கதை தேர்வில் ரொம்பவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்ட பிறகு தான் படக்குழு இயக்குனர் மகிழ் திருமேனியை தேர்ந்தெடுத்திருக்கிறது. மேலும் இந்த படத்தின் கதையில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டம் வேண்டும் என்று அஜித் குமார் எதிர்பார்க்கிறாராம்.
இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது நடிகர் அஜித்குமார் இந்த படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு இரண்டு வருடங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறாராம். ஏற்கனவே துணிவு திரைப்படம் முடிந்த பிறகு அஜித்குமார் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ஏகே 62 ரிலீசிற்கு பிறகு தான் அஜித் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறார்.
மேலும் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மார்ச் மாதம் தொடங்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். மேலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று கண்டிப்பாக ரிலீஸ் ஆக வேண்டும் என்று அஜித் குமார் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால் ஏ கே 62 படக்குழு கண்டிப்பாக விரைவாக செயல்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைமை தான் தற்போது இருக்கிறது.
மேலும் படத்திற்கான பட்ஜெட் என்று முன்னதாகவே எந்த தொகையையும் நிர்ணயிக்கக் கூடாது என்றும் படத்தின் வேலைகள் எவ்வளவு செலவில் நடக்கிறதோ நடக்கட்டும், படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் அஜித்குமார் கட் அண்ட் ரைட்டாக லைக்கா நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.
சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற துணிவு படத்தின் வெற்றி மற்றும் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் ரீச் என நடிகர் அஜித்குமாருக்கு அவருடைய 62 ஆவது படத்தின் மீது மிகப்பெரிய அழுத்தம் உருவாகி இருக்கிறது. வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் இருப்பதால் அஜித் குமார் ஏகே 62 படத்தின் கதையை செதுக்கி வருகிறார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து தற்போது இந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளது.லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை நேற்று நடந்துள்ளதாம். ஆனால், கதாநாயகன் அஜித் இந்த பூஜைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார். அதுமட்டுமின்றி நிரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏகே 62 படத்திற்கு மொத்தம் மூன்று டைட்டில் தேர்ந்தெடுத்துள்ளதாம். இதில் ஏதாவது ஒரு டைட்டில் மார்ச் மாதத்தின் துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டு, மார்ச் இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.ஆகையால் அஜித் ரசிகர்கள் அனைவரும் மார்ச் இரண்டாவது வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத் குமாருக்கு ஜோடியாக விக்டர் வேடத்தில் நடித்தது அருண் விஜய்யின் ஒரே வில்லனாக மட்டுமே இருந்தது. அவரது பாத்திரத்தின் வெற்றி மற்றும் திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு சிறிய மந்தமான பிறகு மீண்டும் வர உதவியது. ‘ஏகே 62’ படத்திற்காக அஜித் மற்றும் அருண் விஜய் மீண்டும் ஒருமுறை இணையப் போவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கலாம்.