Tuesday, April 23, 2024 2:43 pm

அஜித்திற்கு கொக்கி போடும் பிரம்மாண்ட இயக்குனர் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் குமாரின் புதிய படமான ‘ஏகே 62’ படம் சூழ்ந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குனராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் இணைந்து இந்த திட்டம் பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன் தெரியாத காரணங்களால் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ‘தடம்’ புகழ் மகிழ் திருமேனி நடித்துள்ளார்.

‘ஏகே 62’ படத்தின் இயக்குனர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் புயலை கிளப்பும் மாஸ் மோடில் அஜித் நடிக்கும் திட்டத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் இப்போது சலசலப்பு நிலவுகிறது.

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.

கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக முடிக்கவில்லை என்ற காரணத்தால் லைகா நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அதே வேளையில் விஜய்யின் “லியோ” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால் ,அந்த படத்துடன் போட்டிப் போடுவதற்கு நிகரான ஒரு கதையம்சம் தேவை என்பதனாலும், விக்னேஷ் சிவன் சொன்ன ஸ்கிரிப்ட் “லியோ” திரைப்படத்துடன் போட்டிப்போடும் அளவுக்கான ஸ்கிரிப்ட் இல்லை என்ற காரணத்தினாலும்தான் அவரை “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து நீக்கியதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

காரணம் எதுவாகிலும் விக்னேஷ் சிவன் “ஏகே 62” திரைப்படத்தில் இருந்து விலகியது உண்மைதான் என பல பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து விஷ்ணு வர்தன் அஜித்துடன் கைக்கோர்க்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறப்படுகிறது.

மேலும் சமீப நாட்களாக “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் வலம் வருகிறது. இது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது அஜித் குமார் “கே.ஜி.எஃப்” இயக்குனரான பிரசாந்த் நீலுக்கு தொடர்புகொண்டு நாம் படம் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார். பிரசாந்த் நீல் அஜித்தின் தீவிர ரசிகராம். அஜித்தே தொடர்புகொண்டு “படம் பண்ணலாமா?” என்று கேட்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்.

ஆனால் தற்போது பிரசாந்த் நீல் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கவுள்ளாராம். ஒரு படத்தை முடிக்க எப்படியும் ஒன்றரை வருடங்கள் ஆகும், ஆதலால் இப்போது அவரால் அஜித்தை வைத்து படம் இயக்கமுடியாத சூழலில் இருக்கிறாராம்.

இதனை அஜித்திடம் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல். அதற்கு அஜித்குமார், “சரி, நாம் சில வருடங்களுக்குப் பிறகு இதை பற்றி பேசலாம்” என்று கூறினாராம். ஒருவேளை “ஏகே 63” அல்லது “ஏகே 64” திரைப்படத்தில் அஜித், பிரசாந்த் நீலுடன் கைக்கோர்க்க வாய்ப்பிருக்கலாமோ!!

அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்