Saturday, April 1, 2023

Ak62 படத்தில் புதிதாக இணைந்த காமெடி பிரபலம் !! அட இவருமா

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடகக் கைப்பிடியில் இருந்து AK 62 திட்டத்தை நீக்கிவிட்டார், அவர் இனி திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதைக் குறிக்கிறது

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியை அடுத்து ஏகே62 படத்திற்கான அறிவிப்பை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித், நாடு திரும்பியுள்ள நிலையில், விரைவில் இதன் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. த்ரில்லர் ஜானரில் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் துணிவு படத்தில் இணைந்திருந்தார்.

படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. மேலும் கடந்த 8ம் தேதி படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.நெட்பிளிக்சில் வெளியான துணிவு படம், முதல் மூன்று இடங்களை பிடித்து, அதிலும் தனது வெற்றியை வெளிப்படுத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படத்தின் வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால், விக்னேஷ் சிவன், ஏகே62 படத்திலிருந்து விலகினார். இதையடுத்து படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இவர் அருண் விஜய்யின் கேரியர் பெஸ்ட் படங்களான தடம், தடையறத்தாக்க போன்ற படங்களை இயக்கிய நிலையில், ஏகே62 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்புத் தரப்பு இன்னும் வெளியிடாமல் உள்ளது. இதனிடையே இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும், படத்தின் சூட்டிங், ஜூன் -ஜூலை மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, சர்வதேச அளவில் தன்னுடைய பைக் சுற்றுப்பயணத்தை நடிகர் அஜித் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கென படத்தின் ரிலீசையடுத்து ஒரு ஆண்டிற்கு தனது சுற்றுப்பயணத்தை அஜித் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அஜித்துடன் ஏற்கனவே வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்களில் காமெடி கூட்டணி போட்டு நடித்துள்ளார். மேலும் இந்த கூட்டணி ஐந்தாவது முறையாக முறையாக இணைந்துள்ளது.

ஏகே 62 படத்திற்காக அஜித்குமார் விரும்பியதாகக் கூறப்படும் இயக்குனர் விசுவர்தன். அவர் கிடைக்காததால், நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருந்த இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்