28.3 C
Chennai
Thursday, March 23, 2023

‘ஏகே 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பற்றிய அப்டேட் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் குமாரின் புதிய படமான ‘ஏகே 62’ படம் சூழ்ந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குனராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் இணைந்து இந்த திட்டம் பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன் தெரியாத காரணங்களால் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ‘தடம்’ புகழ் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் .

‘ஏகே 62’ படத்தின் இயக்குனர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் புயலை கிளப்பும் மாஸ் மோடில் அஜித் நடிக்கும் திட்டத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தற்போது சலசலப்பு நிலவுகிறது.

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. வினோத் மற்றும் அஜித்தின் கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவர்கள் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு படத்தின் வெற்றி அதை ஈடு செய்யுள்ளது. இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் அஜித் தன் அடுத்த பட வேலைகளை துவங்க ஆயத்தமானார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்தார். கடந்தாண்டே இப்படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் இப்படத்திற்கான கதையை தயார் செய்யும் பணியில் இறங்கினார்.

இதையடுத்து ஜனவரி மாதம் AK62 படப்பிடிப்பு துவங்குவதாக இருந்த நிலையில் திடீரென இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். விக்னேஷ் சிவனின் கதையில் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மகிழ் திருமேனி தான் அஜித்தின் AK62 படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும் இதைப்பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதற்கு காரணம் அஜித் இப்படத்திற்காக மகிழ் திருமேனியிடம் பல கண்டிஷன்களை வைத்துள்ளாராம்.மேலும் கதையிலும் சில மாற்றங்களை அஜித் செய்ய வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த கண்டிஷன்களுக்கு எல்லாம் ஓகே சொன்ன மகிழ் திருமேனி கதையையும் அஜித்திற்கு ஏற்றாற்போல மாற்றியுள்ளார்.

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி ஐந்தே மாதங்களில் முடிக்கப்படவுள்ளதாம். மேலும் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாவதும் உறுதியாகிவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி இணையும் AK62 திரைப்படத்தின் அறிவிப்பு இந்த வாரம் அநேகமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அஜித்தின் மாஸ் வீடியோவுக்கு விருந்தளிப்பார்கள், மேலும் ‘ஏகே 62’ படத்தின் தலைப்பும் ஆரம்பத்தில் வெளியிடப்படும். அஜித், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் ஏற்கனவே லண்டனில் இருப்பதால் இதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும், விரைவில் வீடியோ வெளியாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய கதைகள்