Friday, March 31, 2023

தளபதி மகள் திவ்யா ஷாஷாவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் !!

தொடர்புடைய கதைகள்

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தைப் பார்த்து சூரி மற்றும் விஜய் சேதுபதியைப் பாராட்டிய அல்போன்ஸ்

தமிழில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது....

நடிகர் அஜீத் குமாரின் வரவிருக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்னேஷ் சிவன், அந்த திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட கைவிடப்பட்டு, “தடம்” புகழ் இயக்குனர் மகிழ் திருமேனி படத்தை மாற்றியதாக சினிமா துறைக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கிட்டத்தட்ட உறுதியான விஷயம் என்றாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் சூட்டிங், பூஜை, ரிலீஸ் என்ற எந்த ஒரு தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனாலேயே இப்போது ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திலும், கோபத்திலும் இருக்கின்றார்கள். தற்போது அவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் ஒரு விஷயம் கசிந்துள்ளது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறதாம். ஏனென்றால் இப்படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தயாரிப்பு நிர்வாகம் இருக்கிறது.

இப்படி ஒரு கண்டிஷனை தான் அஜித் போட்டு இருக்கிறார். அதனால் தான் இத்தனை நாட்கள் இந்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அஜித்தின் கண்டிஷனுக்கு இயக்குனர் ஓகே சொல்லி விட்டதால் அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக விஜய், அஜித் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ள இருக்கின்றார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அதனாலேயே அஜித் தீபாவளிக்கு படத்தை வெளியிட பிடிவாதம் பிடித்திருக்கிறார். ஏனென்றால் துணிவு திரைப்படத்திற்கு அந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு வெற்றியை ருசித்த அஜித் மீண்டும் விஜய்யுடன் மோதி தன் பவரை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி ஒரு மறைமுகப் போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில் எப்படியாவது ஏகே 62 ஆரம்பித்தால் சரிதான் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

சமீபத்தில் அஜித் அவர்கள் நடிகர் விஜயின் மகள் ஷாஷா விற்கு அன்பான அறிவுரை ஒன்றை அளித்துள்ளார். விஜயின் மகள் ஷா ஷாவும் அஜித் மகள் அனுஷாவும் ஒன்றாக ஷாவும் பயற்சி எடுத்துவருக்கின்றனர். அப்போது விஜய் மகள் ஷாஷாவை சந்தித்த அஜித் அவரிடம் எப்போதும் பேட்மிண்டன் விளையாடுவதை நிறுத்திவிடாதே ,அது உனது உடல் ஆரோக்கியத்திற்கும், மனதிற்கும் மிகவும் நல்லது என்று அன்பான அறிவுரைகளை வழங்கியுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது. ஆனால் எப்போதும் மற்றவர்களின் நலனில் அக்கரைக்கொண்டிருக்கும் அஜித், விஜய் மகளுக்கு இந்த அறிவுரையை கூறியது உண்மையா என்று தெரியவில்லை. ஒரு வேளை உண்மையாக இருந்தால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மேலும் மகழ்ச்சியாக இருப்பார்கள்.

இருப்பினும், விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்டை அஜித் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும், அஜித்தின் 63 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பயோவில் இருந்து ‘ஏகே 62’ ஐ நீக்கியிருந்தாலும், இயக்குனர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கதையில் அஜித்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார், இது அஜித் சிரிப்பதைக் காட்டுகிறது; மற்றும் இயக்குனர் மற்றும் நடிகரின் கூட்டணி விரைவில் நடக்கும் என்று ஊகிக்கப்பட்டது.

சமீபத்திய கதைகள்