28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

அஜித்திடம் கெஞ்சிய மகிழ் திருமேனி ஒகே சொன்ன அஜித் !!

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகராக விளங்கி வருபவர் அஜித். இவரின் ‘AK 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அவர் இந்த ப்ராஜெக்டிலிருந்து திடீரென விலகியுள்ளார். இதையடுத்து ‘தடம், தடையறத் தாக்க’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி அஜித்தின் ‘AK 62’ படத்தை இயக்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் -மகிழ்திருமேனி கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகிய இருவரிடமும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், ஆனால் அருண் விஜய் தான் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

லைகா தயாரிப்பில் இந்நிலையில் தற்போது ‘AK 62’ குறித்த மற்றோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இன்னும் ஒரு சில தினங்களில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும், மார்ச் முதல் வாரத்தில் படத்தின் உடைய சூட்டிங் நிகழ்வுகள் ஆரம்பமாகும் என்றும், இந்த சூட்டிங் ஆனது ஜூன் -ஜூலை மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி தினத்தன்று இந்தப் படம் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகின்றது.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். ஏனெனில் AK 62 படத்தினுடைய அப்டேட்டுகளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த விடயமானது இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அதே போல், பல ஆண்டுகளாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த தல தற்போது இந்த படத்திற்க்காக தலை முழுவதும் கலரிங் செய்துவிட்டு இளமையாக தலை தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் தல ரசிகர்களுக்கு வரும் தீபாவளி தல தீபாவளிதான்.

ஏகே 62 படத்திற்காக அஜித்குமார் விரும்பியதாகக் கூறப்படும் இயக்குனர் விசுவர்தன். அவர் கிடைக்காததால், நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருந்த இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்