‘துணிவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் குடும்பத்துடன் ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றார். நடிகர் அவர் முன்பு ஐரோப்பாவில் சாலைப் பயணத்தில் இருந்தபோது நாட்டிற்குச் சென்றார். சில நாட்களுக்கு முன்பு, ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் அஜித்துடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் தனது சூரிய ஒளி என்று கூறினார். தற்போது, நடிகர் தனது வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. நடிகர் சென்னை விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதனால் இப்பொழுது ஏகே 62 படத்தில் அந்த மாதிரியான லேக் ஆகுற காட்சிகள் எதுவும் வேண்டாம் என்று மகிழ் திருமேனிடம் திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். இதிலிருந்து அவர் செண்டிமெண்ட் படங்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் மகிழ் திருமேனி இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறார்.
அந்தக் கதையில் ஒன்று குடும்பங்களை கவரும் வகையில் பேமிலி சப்ஜெக்ட் கதையை கூறி இருக்கிறார். மற்றொன்று ஸ்பை த்ரில்லர் கதையை அப்படியே படம் பார்ப்பது போலையே சொல்லி அஜித்தை கவர்ந்திருக்கிறார். இந்த இரண்டு கதைகளை கேட்ட அஜித் எந்த கதைக்கு ஓகே சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை.
மேலும் அஜித், ஏகே 62 படத்திற்காக சில கண்டிசன்களை மகிழ் திருமேனியிடம் போட்டு இருக்கிறார். இது எல்லாத்தையும் கடந்து ஏகே 62 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று மும்மரமாக மகிழ் திருமேனி களத்தில் இறங்கி இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கான வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதால் இது குறித்து அப்டேட்டுகள் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அவர் துணிவு படத்தின் வெற்றியை பார்த்ததால் கண்டிப்பாக ஆக்சன் படத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார் என்று தெரிகிறது. ஏனென்றால் இந்த மாதிரியான காட்சிகள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. அதனால் அவரின் வெற்றி பார்முலாவை தான் கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் அஜித் ஹீரோவாக ஒரு ஒரு கதாபாத்திரத்திலும், வில்லனாக ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சிட்டிஷன் படத்தைப் போல இந்த படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் வருவார் என்று கூறப்படுகிறது. இந்த சுவாரஸ்யத் தகவலால் ரசிகர்கள் மிகவும் குஷியாகி உள்ளனர்.
மேலும் இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராய், தபு போன்றவர்கள் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் தவறு என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக திரிஷா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்டை அஜித் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும், அஜித்தின் 63 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பயோவில் இருந்து ‘ஏகே 62’ ஐ நீக்கியிருந்தாலும், இயக்குனர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கதையில் அஜித்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார், இது அஜித் சிரிப்பதைக் காட்டுகிறது; மற்றும் இயக்குனர் மற்றும் நடிகரின் கூட்டணி விரைவில் நடக்கும் என்று ஊகிக்கப்பட்டது.