28.3 C
Chennai
Thursday, March 23, 2023

அஜித்துக்கு போட்டியாக மஞ்சுவாரியர் எடுத்த அதிரடி முடிவு !!

Date:

தொடர்புடைய கதைகள்

இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் மேக்கிங் வீடியோ இதோ...

விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவதாக முன்னதாக...

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

நடிகை மஞ்சுவாரியர் BMW சூப்பர் பைக் ஒன்றை வாங்கி உள்ளார். இணையத்தில் வெளியான போட்டோவை பார்த்தவர்கள் அஜித்திற்கு போட்டியா வருவாங்க போல என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் மஞ்சு வாரியர்.

திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மஞ்சு வாரியர், விவாகரத்துக்கு பின் மீண்டும் அதிரடியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.மலையான நடிகையான மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். தனுஷின் மனைவியாக பச்சையம்மா என்ற கதாபாத்திரத்தில் சும்மா அதிரடியாக நடித்திருந்தார். இவர் நடித்த கதாபாத்திரத்தை அனைவரும் பாராட்டினார்கள். அதுமட்டுமில்லாமல், அசுரன் இரண்டு தேசிய விருதை வென்றது.

அசுரன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், நல்ல கதைக்காக காத்திருந்த மஞ்சு வாரியர், எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். பல அதிரடியான சண்டை காட்சியில் சும்மா சுற்றி சுற்றி சண்டை போட்டு தமிழ் ஆடியன்ஸின் மனதில் பதிந்து விட்டார் மஞ்சு வாரியர்.துணிவு திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பைக் ரைடு சென்றிருந்தார். கரடு முரடான பாதையில் மஞ்சு வாரியர் சும்மா அதிரடியாக ஓட்டி கெத்து காட்டி இருந்தார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, பைக் டூருக்கு தன்னை உடன் அழைத்துச் சென்ற அஜித்திற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

அஜித்துடன் டூர் சென்று வந்ததில் இருந்து இவருக்கு பைக்கின் மீது காதல் வர தற்போது மஞ்சு வாரியர் BMW சூப்பர் பைக்கை வாங்கி உள்ளார். BMW R 1250 GS மாடலை சேர்ந்த அந்த பைக் விலை, கொச்சியில் 26 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த பைக்கை மஞ்சு வாரியர் கொச்சி BMW ஷோ ரூமில் வாங்கியுள்ளார். இந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல், அஜித்திற்கு போட்டியா வருவாங்க போல என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

ஏகே 63 இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் இருக்க வாய்ப்புள்ளது என்பது தொழில்துறையில் உள்ள மற்ற பெரிய செய்தி. அஜீத் இயக்குனரை மாற்ற விரும்பியபோது, ​​லைகா விஷ்ணுவர்தனை அழைத்தார், அவர் இந்த ஆண்டு தர்மா புரொடக்ஷன்ஸ் இந்தி படத்தில் பணிபுரிவதாகவும், தேதிகள் இல்லை என்றும் அவர்களிடம் கூறினார்.

பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் இடையே நல்ல உறவு உள்ளது. இந்த ஜோடி மிகவும் முன்னதாகவே மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அஜீத் போனி கபூருடன் மூன்று பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் மற்றும் விஸ்னுவர்தன் பல படங்களில் தர்மா புரொடக்ஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்ததால், இருவரும் இணைந்து பணியாற்ற முடியவில்லை.

சமீபத்திய கதைகள்