Thursday, March 30, 2023

அஜித்தை பற்றி மோகன் ஜி கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா !

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

மோகன் ஜி இதுவரை தயாரித்த படங்கள், அவர்கள் தொடும் தலைப்புகளுக்காக எப்போதும் சர்ச்சைக்குரியவை. பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்குச் செயல்படுத்த வேண்டிய சுதந்திரத்தின் அளவைப் போதிப்பது அவரது முந்தைய படங்களில் நிலையானது, பகாசுரன் அவர் தொட விரும்பும் சமூகப் பிரச்சினைகளின் மற்றொரு நீட்டிப்பாகும். இந்த ரிவெஞ்ச் த்ரில்லர் ஆன்லைன் விபச்சாரம் மற்றும் பெண்கள் எவ்வாறு பல்வேறு வழிகளில் சுரண்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றியது.

நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சார்ட் ரிஷியை வைத்து திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட 2 படங்களை எடுத்த இயக்குநர் மோகன் ஜி நடிகர் அஜித் கூட போட்டோ எடுக்கவே பயமா இருக்கு என சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது கோலிவுட்டையே பரபரப்பாக்கி உள்ளது.செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தை இயக்கி உள்ள மோகன் ஜி அந்த படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக பல மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

தனுஷின் வாத்தி படம் வெளியாக உள்ள பிப்ரவரி 17ம் தேதியே தில்லாக அவர் அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படத்தையும் ரிலீஸ் செய்கின்றனர்.இந்த ஆண்டு பொங்கலுக்கு நண்பர்களான விஜய் மற்றும் அஜித் படங்கள் நேரடி மோதலில் ஜனவரி 11ம் தேதி வெளியானது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் அடுத்த போட்டியாக அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படமும் தம்பி தனுஷ் நடித்துள்ள வாத்தி படமும் ஒரே நாளில் பிப்ரவரி 17ம் தேதி மோத உள்ளது.

இளம் கல்லூரி மாணவிகளை டார்கெட் செய்து ஆபாச தொழிலில் ஈடுபட வைக்கும் கும்பலை செல்வராகவன் வதம் செய்யும் கதையாக பகாசூரன் உருவாகி உள்ளது. படத்தின் ஸ்னீக் பீக், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்களை கவரும் வகையில் உள்ளதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷியை வைத்து பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் என மூன்று படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இந்த முறை இயக்குநர் செல்வராகவனை ஹீரோவாக வைத்து பகாசூரன் படத்தை இயக்கி உள்ளார்.

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரெளபதி மற்றும் ருத்ர தாண்டவம் படங்களை தனது மகள் அனோஷ்காவுடன் தியேட்டருக்கு வந்து நடிகை ஷாலினி அஜித் பார்த்து விட்டு தனது முழு ஆதரவை சகோதரர் ரிச்சர்ட் ரிஷிக்கு கொடுத்துள்ள்ளார்.அஜித்தின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பல முறை ரிச்சர்ட் ரிஷி என்னை அழைப்பார். ஆனால், நான் போகவே மாட்டேன். போகாமல் தவிர்த்து வர ஒரு முக்கிய காரணமும் உள்ளது என மோகன் ஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது சினிமா துறையையும் ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளது.

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் நான், அவங்க வீட்டு விசேஷத்துக்கு சென்றால், நிச்சயம் தலயுடன் ஒரு போட்டோ எடுக்கணும்னு தோணும். ஆனால், அப்படி செய்தால் இங்கே இருக்கிறவனுங்க என்ன பேசுவானுங்களோ என்கிற பயத்தாலே அஜித் சார் கூட போட்டோ எடுக்கவும் இல்லை அவர் வீட்டு விசேஷத்திற்கும் போவதை தவிர்த்து வருகிறேன் என பேசி உள்ளார்.சாதிய படங்களை எடுப்பவன் மோகன் ஜி என்கிற முத்திரை குத்தப்பட்டு இருக்கு. செல்வராகவன் சார் இந்த படத்தை கமிட் பண்ணதும் ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்தன. வேண்டாம் சார் படத்தை விட்ரலாம் என்றே சொல்லிட்டேன். ஆனால், அவர் தான் நம்பிக்கை கொடுத்தார். நிச்சயம் பகாசூரன் படத்திற்கு பிறகு என் மீதான எண்ணம் ரசிகர்களுக்கு மாறும், அதன் பிறகு அஜித் சாருடன் இணைந்து போட்டோ எடுப்பேன், அவரை வைத்து படம் எடுக்கவும் ஆசையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஒளிப்பதிவு (ஃபாரூக் ஜே பாஷா) மற்றும் பின்னணி இசை (சாம் சிஎஸ்) சில காட்சிகளை சற்று உயர்த்த உதவுகிறது. செல்வராகவனின் நடிப்பு படத்தைத் தக்கவைக்கும் அளவுக்கு கண்ணியமாக இருக்கிறது, அதே சமயம் நட்டியும் அதை நன்றாக நிறைவு செய்கிறார். காலம், உட்காருவதற்கு சற்று நீண்டது. இறுதியில், நமக்கு ஒரு படம் எஞ்சியிருக்கிறது, அதன் தாக்கம் மிகவும் லேசானது.

சமீபத்திய கதைகள்