28.3 C
Chennai
Thursday, March 23, 2023

மகிழ்திருமேனிக்கு அஜித் கொடுத்த டபுள் சர்ப்ரைஸ் !!

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள அஜித்குமாரின் வரவிருக்கும் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், லைகா புரொடக்‌ஷன்ஸ் இதுவரை இந்த படத்தை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தாமதம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தொழில்துறையினர் சுட்டிக்காட்டினர்.வெளிப்படையாக, அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘ஏகே 62’ என்ற தலைப்புடன் அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, மாறாக அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்படும் வரை காத்திருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து ஏகே 62 படத்தை மகிழ்த்திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ளது. லைக்கா ப்ரொடக்ஷன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் அருண் விஜய்க்கு டைனிங் பாயிண்டாக அமைந்த தடம் படத்தை மகிழ்திருமேனி தான் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஏகே 62 படத்திற்காக மகிழ்திருமேனி இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருந்தாராம். அஜித்தை சந்தித்து இந்த கதைகளை மகிழ் கூறியுள்ளார். அதில் ஒன்று ஃபேமிலி கலந்த ஆக்சன் சப்ஜெக்ட்டாக இருந்துள்ளது. மற்றொன்று திரில்லர் கலந்த ஆக்சன் கதையை கூறியுள்ளார்.

இந்த இரண்டு கதைகளுமே அஜித்துக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். இதனால் விரைவில் ஏகே 62 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி அஜித் மகிழ்திருமேனிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது இந்த இரண்டு கதைகளுமே அஜித் நடிப்பதாக உறுதியளித்து உள்ளாராம்.

ஏனென்றால் அஜித் பொதுவாக ஒரு இயக்குனருடன் பணியாற்றினால் அடுத்த இரண்டு மூன்று படங்களும் அதே இயக்குனருடன் தான் கூட்டணி போடுவார். அப்படிதான் சிறுத்தை சிவா, வினோத் ஆகியோர் அஜித் லிஸ்டில் உள்ளனர். இப்போது அதில் மகிழ்திருமேனியும் இணைந்துள்ளார். அதாவது ஏகே 62 மற்றும் 63 படங்கள் மகிழ்திருமேனி தான் இயக்க உள்ளார்.

அதாவது இரண்டு கதையுமே கூறி அஜித்தை மகிழ்திருமேனி இம்ப்ரஸ் செய்துள்ளார். அந்தக் கதையை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்க அஜித் மனம் இல்லாததால் தானே நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு உள்ளாராம். மேலும் இந்த இரண்டு படங்களுமே லைக்கா தான் தயாரிக்க உள்ளது.

ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில் ஏகே 63 படத்தை இவர் இயக்குவார் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. இப்போது மகிழ்திருமேனிக்கு தான் அடுத்த இடமும் கிடைத்துள்ளது. அஜித் மனதில் வினோத் எப்படி ஒரு நல்ல பெயருடன் இருக்கிறாரோ அந்த இடத்தை தற்போது மகிழ்திருமேனி பிடித்துள்ளார்.

அஜீத் குமாரின் சமீபத்திய திரைப்படமான துணிவு, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 305 கோடிக்கு மேல் சம்பாதித்தது, இது சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய தமிழ் வெற்றிகளில் ஒன்றாகும். இரண்டாவது பொங்கல் வெளியீடான வரிசுவும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. இரண்டு படங்களும் ஜனவரியில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றன. துனிவு ஒரு வலுவான சமூக செய்தியைக் கொண்ட பணம் கொள்ளையடிக்கும் கதை, அதேசமயம் வாரிசு ஒரு குடும்ப பொழுதுபோக்கு.

சமீபத்திய கதைகள்