Saturday, April 20, 2024 3:47 pm

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக மீனவர்கள் தாக்குதல்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது கல் வீசி தாக்கியதில் 8 பேர் காயம் அடைந்தது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி அருகே கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடிக்கச் சென்றபோது, கர்நாடகாவில் இருந்து வந்த படகுகளை தமிழக மீனவர்கள் சுற்றி வளைத்து தாக்கியதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவத்தை கர்நாடக மீனவர்கள் வீடியோ எடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மீன்வளத்துறை இணை இயக்குனர் ஹரீஷ்குமாரை சந்தித்து பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.

கர்நாடக மீனவர்கள் மீது தமிழக மீனவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஹரிஷ் குமார் தெரிவித்தார்.

கர்நாடக மீனவர்கள் எல்லைக்கு மீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கலாம்.மீன்பிடி படகுகள் எல்லையை தாண்டினதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

மீனவர்கள் 12 நாட்டிகல் மைல் முதல் 200 நாட்டிகல் மைல் வரை ஆழமாக மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

இந்த தாக்குதல் தொடர்பாக மீனவர் சங்கத்தினர் மங்களூருவில் கூட்டம் நடத்தினர். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என்பதால், மீன்வளத்துறை இயக்குனரகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக மங்களூருவில் உள்ள பாண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்