Friday, March 31, 2023

அஜித்க்காக சூப்பர் ஹிட் கதை வைத்துள்ள சென்சேஷ்னல் இயக்குனர் !

தொடர்புடைய கதைகள்

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தைப் பார்த்து சூரி மற்றும் விஜய் சேதுபதியைப் பாராட்டிய அல்போன்ஸ்

தமிழில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது....

‘பத்து தல’ படத்தின் முதல் நாள் வசூல் ரிப்போர்ட் இதோ !

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' நேற்று (மார்ச் 30) பெரிய திரைகளில்...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் குடும்பத்துடன் ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்றார். நடிகர் அவர் முன்பு ஐரோப்பாவில் சாலைப் பயணத்தில் இருந்தபோது நாட்டிற்குச் சென்றார். சில நாட்களுக்கு முன்பு, ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் அஜித்துடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் தனது சூரிய ஒளி என்று கூறினார். தற்போது, நடிகர் தனது வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. நடிகர் சென்னை விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போர்ச்சுகல் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு டூர் சென்று வந்த நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பியதாக அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.இந்த மாதம் 1, 2, 3 தேதிகளில் விஜய்யின் லியோ படத்தின் அதிரடியான அப்டேட்கள் வெளியாகி அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.பிப்ரவரி 6ம் தேதி ஏகே 62 படத்தின் இயக்குநர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல்

வலிமை படத்தை பார்த்து அப்செட்டான அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பக்கா மாஸ் படமாக அமைந்தது. படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகளை எல்லாம் மறந்து விட்டு அஜித்தின் அதிரடியான ஆக்‌ஷன், டான்ஸ், காமெடி டைமிங், லுக் என அனைத்தையும் ரசிகர்கள் தியேட்டர்களில் ரசித்து பார்த்து கொண்டாடினர். ஓடிடியிலும் துணிவு திரைப்படம் உலகளவில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

அஜித்தின் ஏகே 62 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் விஜய்யின் லியோ படத்துடன் மோத தரமான ஆக்‌ஷன் படத்தை கொடுக்கவே அதிரடியாக விக்னேஷ் சிவனை மாற்றி விட்டனர் என்றும் பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன. ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார் என்று இதுவரை லைகா நிறுவனம் அறிவிக்காத நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62வை தனது பயோவில் இருந்து நீக்கிய நிலையில், அந்த தகவல் உறுதியானது தான் என தெரிய வந்தது.

விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்றும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இந்த தகவலை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுக்கு நடிகர் அஜித் சுற்றுலா செய்து வந்த நிலையில், அவரது புகைப்படங்களை மனைவி ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளன.

வெளிநாட்டில் டூர் அடித்து வந்த நடிகர் அஜித் தனது சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளதாக சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் சில ரசிகர்களுடன் நடிகர் அஜித் குமார் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், தகவல்கள் கசிந்துள்ளன.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு காதலர் தினத்துக்காவது வரும் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போன அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித் சென்னை திரும்பி விட்டார் என்கிற செய்தி கேட்டதுமே, அப்போ ஏகே 62 அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சந்தோஷத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே லைகா நிறுவனத்துடனான படத்தை முடித்த பிறகு அஜித் , கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. கேஜிஎஃப், காந்தாரா என அந்த நிறுவனம் எடுத்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டாகி வசூல் வேட்டை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது

ஹோம்பலே ஃபிலிம்ஸ் அடுத்த 5 வருடங்களுக்கு எடுக்கவிருக்கும் படங்களுக்கு 3000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறதாம். எனவேஅஜித்தை வைத்து படம் எடுப்பது உறுதி என பலர் கூறுகின்றனர். அதேசமயம் அந்தப் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால், கேஜிஎஃப் இரண்டு பாகங்கள் மூலம் ஹோம்பலே ஃபிலிம்ஸுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைத்துவிட்டது. எனவே அந்தப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீலே அஜித்தை வைத்து படத்தை இயக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்டை அஜித் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும், அஜித்தின் 63 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பயோவில் இருந்து ‘ஏகே 62’ ஐ நீக்கியிருந்தாலும், இயக்குனர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கதையில் அஜித்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார், இது அஜித் சிரிப்பதைக் காட்டுகிறது; மற்றும் இயக்குனர் மற்றும் நடிகரின் கூட்டணி விரைவில் நடக்கும் என்று ஊகிக்கப்பட்டது.

சமீபத்திய கதைகள்