நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தியரி தேர்வு இன்று தொடங்கியது.
10 ஆம் வகுப்பு தேர்வை 21,86, 940 மாணவர்களும், 12 ஆம் வகுப்பிற்கு 16,96,770 மாணவர்களும் எழுத உள்ளனர்.
மொத்தம் 24,491 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தோற்றுவதோடு, நாடு முழுவதும் மொத்தம் 6,759 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.