Saturday, April 1, 2023

சைலண்டாக அஜித்திற்கு கதை சொன்ன பிரம்மாண்ட இயக்குனர் !! உச்ச கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜீத் குமார் கடந்த பத்தாண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார். எச்.வினோத் இயக்கிய மற்றும் போனி கபூர் தயாரித்த அவரது மிகச் சமீபத்திய அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமான ‘துனிவு’ உலகளவில் வசூலில் அவரது தொழில் வாழ்க்கையில் சிறந்ததாக மாறியது. இப்போது அனைவரது பார்வையும் அவரது 62 வது படத்தின் மீது உள்ளது.

நடிகர் அஜித் நடித்த துணிவு படம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் சக்கைப்போடு போட்டுவருகிறது. இதுஒருபுறம் இருக்க அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 குறித்து தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பின்னர் திடீரெனெ அவரை நீக்கிவிட்டு இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தனர். அவர் இயக்குவது உறுதியான போதும் ஏகே 62 குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடாமல் உள்ளனர்.

அறிவிப்பு தாமதம் ஆவதற்கான காரணம் குறித்து புதிய தகவல் கோலிவுட்டில் உலாவருகிறது. அது என்னவென்றால், நடிகர் அஜித், மகிழ் திருமேனியிடம் திடீரென கதை கேட்டதும், அவர் தான் ஏற்கனவே விஜய்க்கு சொன்ன மூன்று கதைகளை தான் அஜித்துக்கு சொல்லியுள்ளார். இதில் ஒரு கதையை தான் அஜித் தேர்ந்தெடுத்து உள்ளாராம். விஜய்க்காக மகிழ் திருமேனி ரெடி பண்ணிய அந்த கதையை அஜித்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யுமாறு லைகா தரப்பும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதற்கான வேலைகள் தான் தற்போது நடந்து வருகிறதாம். அஜித்துக்கு ஏற்றார் போல் அந்தக் கதையில் சில் மாற்றங்களை செய்யும் பணியில் இயக்குனர் மகிழ் திருமேனி மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்திற்கு அந்த பணிகளை முடித்து மார்ச் மாதம் முதல் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். அதோடு அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வும் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுவென முடித்து வருகிற தீபாவளி பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டுவர வேண்டும் என்கிற முடிவில் லைகா நிறுவனம் உறுதியாக உள்ளதாம்.

ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஒருவருடன் அஜித் கூட்டணி போடுவது சில காலமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதாவது இயக்குனர் ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டார். ஆனால் அஜித்துடன் தற்போது வரை இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் ஏற்கனவே ஷங்கர் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். ஆகையால் ஏகே 63 படத்தை ஷங்கர் இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ஷங்கர் ராம்சரணை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே தற்போது முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த படத்திற்கான யோசனையில் ஷங்கர் இருக்கிறாராம். ஆகையால் அடுத்ததாக முதல்முறையாக அஜித், ஷங்கர் கூட்டணியில் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஷங்கருக்கு போட்டியாக புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். மேலும் இந்த இரு படங்களுமே கண்டிப்பாக உருவாகும் என்றாலும் அஜித் முதலில் ஷங்கரை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது சுகுமாரை தேர்ந்தெடுக்கிறாரா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது

அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளதாகவும், விமான நிலையத்தில் அவர் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிகிறது. இப்போது ரசிகர்கள் ஆவலுடன் ‘AK 62’ பற்றிய அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்,

சமீபத்திய கதைகள்