Saturday, April 1, 2023

அஜித் போடும் புதிய கணக்கு ! AK 62 படத்துக்காக ஃபேவரைட் இயக்குநரை ஓகே செய்த அஜித் !!

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜீத் குமாரின் ‘துணிவு’ திரைப்படம் வெற்றியடைந்ததில் இருந்தே, நடிகரின் ரசிகர்கள் ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் அவரது திரைப்படம் குறித்த சில அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் வழங்கிய ஸ்கிரிப்ட் நடிகர் அஜித் திருப்தி அடையவில்லை என்று ஊகங்கள் பரவி வருகின்றன. மேலும், ‘தடையறா தாக்க’, ‘மீகமன்’, ‘தடம்’, ‘கலக தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனியிடம் தனது அடுத்த படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படம் தற்போது மகிழ் திருமேனியின் கைகளில் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.இதனிடையே ஏகே 62 படத்திற்காக அஜித் தனது ஃபேவரைட்டான இயக்குநரை டிக் செய்திருந்ததாகவும், ஆனால் அது நடக்காமல் போய்விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அஜித் ரசிகர்கள் தற்போது துணிவு வைப்-இல் இருந்து ஏகே 62 வைப்ரேஷனுக்கு மாறிவிட்டனர். அஜித் – வினோத் கூட்டணியில் துணிவு படம் கொடுத்த மாஸ் ஹிட்டால், ஏகே 62 மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குவார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக ஏகே 62 படத்திற்காக வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன், கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரும் அஜித்திடம் கதை சொல்லியிருந்ததாகக் கூறப்படுகிறது. அஜித்துக்கு மங்காத்தா படம் மூலம் மரண மாஸ் ஹிட் கொடுத்தவர் வெங்கட் பிரபு. அதனால் அஜித் – வெங்கட் பிரபு காம்போவில் மங்காத்தா 2 உருவாகினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பேசிவந்தனர். அதேநேரம் அஜித் விஷ்ணுவர்த்தனை டிக் செய்ததாக சொல்லப்படுகிறது.

விஷ்ணுவர்த்தன் முதலில் அஜித்துக்காக ஒரு கதையுடன் காத்திருந்தாராம். ஆனால், ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானதால், அவர் மலையாள ஹீரோவுடன் அடுத்த படத்தில் இணைய முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் தான் ஏகே 62-வில் இருந்து விக்னேஷ் சிவன் விலகுவது உறுதியாகியுள்ளது. அதனால் ஏகே 62 படத்துக்காக மீண்டும் விஷ்ணுவர்த்தனை அஜித்தே அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விஷ்ணுவர்த்தன் புதிய படத்தில் கமிட் ஆகிவிட்டதால் அஜித்துடன் இணைய முடியவில்லை என சொல்லப்படுகிறது.

2007ல் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான பில்லா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. ரஜினியின் பில்லா ரீமேக் வெர்ஷனாக உருவான இந்தப் படத்தில் அஜித்தை செம்ம ஸ்டைலிஷாக காட்டியிருந்தார் விஷ்ணுவர்த்தன். அஜித், நயன், யுவன், விஷ்ணுவர்த்தன் காம்போவில் தரமாக ரிலீசாகி பட்டையைக் கிளப்பியது பில்லா. இதேகூட்டணியில் 2013ம் ஆண்டு ரிலீஸான ஆரம்பம் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனால் அஜித் – விஷ்ணுவர்த்தன் கூட்டணி மீண்டும் இணையும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். மேலும், அஜித்தின் ஏகே 63 படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘போடா போடி’, ‘நானும் ரவுடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘பாவா கதைகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’ இயக்கத்தில் அவர் பிரபலமடைந்தார். அஜித் குமாரின் கடைசிப் படமான ‘துணிவு’ வங்கிக் கொள்ளையைச் சுற்றி வந்தது மற்றும் மஞ்சு வாரியரை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்திய கதைகள்