Friday, March 31, 2023

சினிமாவை தாண்டி அஜித்தின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கும் அஜித் !!

தொடர்புடைய கதைகள்

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தைப் பார்த்து சூரி மற்றும் விஜய் சேதுபதியைப் பாராட்டிய அல்போன்ஸ்

தமிழில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது....

அஜீத் குமாரின் சமீபத்திய தமிழ்த் திரைப்படமான துணிவு கடந்த மாதம் ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வந்தது. கடந்த ஆண்டு வலிமைக்குப் பிறகு மீண்டும் நடிகர், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் கூட்டணியில் படம் பார்த்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் வாரிசு உடன் நேரடியாக மோதியது.துணிவு பெரிய வியாபாரம் செய்தது .

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ஒரு சாதாரண மனிதராக சினிமாவில் அறிமுகமாகி எந்த ஒரு பெரிய சினிமா பின்னனியும் இல்லாமல் இன்று பல பேர் ஆச்சரியமாக பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவரின் விடா முயற்சியும் கடின உழைப்புமே முக்கிய காரணமாக இருக்கும்.

ஆரம்பகாலங்களில் ஏகப்பட்ட தோல்விகளை கண்ட அஜித் மனம் தளராமல் சினிமாவிற்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள போராடியிருக்கிறார். ஆனால் இந்த சினிமாவில் வந்ததே ஒரு விபத்து தான் என்று முன்னதாக அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜித்

சினிமாவில் நுழைந்ததற்கு அப்புறம் தான் எப்படியாவது நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வந்திருக்கிறார். நடிக்க வருவதற்கு முன் ஒரு ஆட்டோ மொபைல் கடையில் வேலை பார்த்தாராம் அஜித். அவருக்கு கார், பைக் இவற்றின் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறார்.

அதன் காரணமாக படிப்பில் மீது ஆர்வம் இல்லாத அஜித் ஆட்டொ மொபைல் கடையில் சேர்ந்து ஒர்க் ஷாப் இவற்றின் மீது ஆர்வமாக இருந்திருக்கிறார். ஆனால் தன் பையன் மெக்கானிக்காக இருப்பதை அவர்கள் பெற்றோர்கள் விரும்பவில்லையாம். அதன் பிறகு ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தில் மெக்கானிக் சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இப்படி தன் கவனத்தை மெக்கானிக் சம்பந்தபட்ட வகையிலேயே கொண்டு போன அஜித்திற்கு அவர் சினிமாவில் வந்தது ஒரு விபத்து என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பேட்டியில் ஒரு நாளைக்காவது நான் சொந்தமாக பிஸினஸ் ஆரம்பித்து அதன் மூலம் மெக்கானிக் பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

ஒரு வேளை சினிமாவில் இன்னும் அவ்ளோதான் என்று எப்பொழுது அஜித் முடிவு எடுக்கிறாரோ அவரிடம் இருக்கும் அடுத்த அயுதம் அவர் ஆசைப்பட்ட அந்த ஷாப்பை வைப்பது தான் என்று அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில் கூறிவருகின்றனர்.


Netflix இல் வெளியான பிறகு, படம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நம்பர் 1 இடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. வங்கியின் முதலாளியால் துன்புறுத்தப்பட்ட ஒரு அப்பாவி மனிதனைப் பழிவாங்குவதற்காக சென்னை வங்கியைக் கொள்ளையடிக்கும் நிழல் உருவமான டார்க் டெவில் ஆக அஜித் சித்தரிக்கிறார்

சமீபத்திய கதைகள்