32.2 C
Chennai
Saturday, March 25, 2023

நெட்டில் லீக் ஆன லியோ படத்தின் கார் Sequel சீன் இணையத்தில் வைரல் ! அதிர்ச்சியில் படக்குழு

Date:

தொடர்புடைய கதைகள்

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா !

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், வரவிருக்கும் தமிழ்த் திரைப்படத்தில் அவரது...

விஜய் அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க போனதற்கு முக்கிய...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் 2021 இல் பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றியைப் பெற்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் லியோவுக்காக மீண்டும் இணைந்துள்ளனர். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், சஞ்சய் தத் கெட்டவராகக் காணப்படுகிறார். மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன் சர்ஜா, சாண்டி, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் அடித்த நிலையில், லோகேஷ் இயக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இதுவும் தளபதியுடன் மீண்டும் இணையப்போவதாக தகவல் பரவியதால், தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதையடுத்து கடந்த வாரம் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை ரசிகர்களே போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு திணற திணற அடுத்தடுத்து வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில், விஜய், திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், மேத்தீவ் தாமஸ், மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகை திரிஷா திட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்திலிருந்து ப்ரோமோ வீடியோவை அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், ஒரு பக்கம் சாக்லேட்டை ரசித்து ரசித்து செய்யும் விஜய், மறுபக்கம், இரும்பு நெருப்பு குழம்பில் கத்தி செய்யும் விஜய் என மாறி மாறி அதிரடியாக காட்டி கடைசியில், அந்த கூர்மையான வாளை சாக்லேட்டில் நனைத்து அதை தொட்டு ருசித்துப் பார்த்து விட்டு பிளடி ஸ்வீட் பஞ்ச் வசனம் பேசி மிரளவிட்டிருந்தார் விஜய். இப்படம் அக்டோபர் 19ந் தேதி வெளியாக உள்ளது.

அனைத்து அப்டேட்டுகளையும் அடுத்தடுத்து அறிவித்து விட்டு, இனி அப்டேட்டுனு கேட்டா அவ்வளவுதான் என்பது போல லியோ படக்குழு விறுவிறுப்பாக ஷூட்டிங்கை நடத்தி வருகிறது. இதையடுத்து காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை லோகேஷ் ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோவில் தீ கொளுத்துவிட்டு எரிய, அதனை சுற்றி லோகேஷ், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ப்ரதர்ஸ், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், இன்று லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ லீக்காகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் நடந்து வருகிறார் அவரை சுற்றி பலர் நடந்து வருகின்றர். 8 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ஷேரான சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டுவிட்டாலும், அந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தளபதி விஜயின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியாகிவிட்டால், எந்த விதமான எச்சரிக்கையும் இன்றி உடனடியாக அவை நீக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, தினேஷ் நடனம் மற்றும் அன்பரிவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘லியோ’ படத்தை லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்