Saturday, April 1, 2023

அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து விக்கி போட்ட இன்ஸ்டா 🔥 பதிவு வைரல் ! HATERS ⭐ க்கு சரியான பதிலடி கொடுத்த விக்கி

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜீத் கடைசியாக வெளிவந்த ‘துனிவு’ மற்றும் அதிரடி நாடகம் நடிகரின் அதிக வசூல் செய்த படமாக மாறியது. அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது, மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போது, சமீபத்திய அறிக்கை ‘ஏகே 62’ மேலும் ஒரு திருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வளர்ச்சியில் இயக்குனர் அவர்களை ஈர்க்கத் தவறியதால் தயாரிப்பாளர்களும் அஜித்தும் மனம் மாறினர். ‘அஜித் 62’ படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த ஆச்சரியம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதோ அதோ என்று பல அலப்பறைகளுக்கு நடுவே ஒரு வழியாக ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனர் சிக்கிவிட்டார். துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடித்திருக்கும் ஏகே 62 திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் படத்தை யார் தான் இயக்கப் போகிறார்கள் என்ற குழப்பம் மட்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் இந்தக் கூட்டணியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தது. அதில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தது. ஆனால் இவை எல்லாம் வெறும் யூகங்களாக மட்டுமே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்திற்கான இயக்குனரை லைக்கா நிறுவனம் ஒரு வழியாக முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பலரும் எதிர்பார்த்தபடியே மகிழ்திருமேனி தான் அஜித்தை இயக்க இருக்கிறார். இதற்கான தடபுடலான ஏற்பாடுகள் அனைத்தும் இப்போது படு ஜோராக நடந்து வருகிறது.

மேலும் மகிழ் திருமேனி தற்போது லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனை சந்திக்க லண்டனுக்கு பறந்துள்ளார். அங்கு படம் தொடர்பான அனைத்து விஷயங்களும் விறுவிறுப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறதாம். அது மட்டுமல்லாமல் மகிழ் திருமேனி கூறிய கதையில் லைக்கா நிறுவனம் முழுமையாக திருப்தி அடைந்திருக்கிறது.

அந்த வகையில் இன்னும் ஓரிரு தினங்களில் இந்த கூட்டணியின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து படத்தின் பூஜையும் போடப்பட்டு படப்பிடிப்பு வேகமாக நடைபெற இருக்கிறதாம். இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான். மேலும் எந்த விஷயத்தையும் முடிவு செய்யாமல் மகிழ்திருமேனியை சுபாஷ்கரன் லண்டனுக்கு அழைக்கவில்லை.

இதனால் அஜித்தின் ரசிகர்கள் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் விஜய்யின் லியோ திரைப்படம் தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் சோசியல் மீடியாவை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இனி அஜித்தின் ஆட்டமும் ஏகே 62 மூலம் படுஜோராக ஆரம்பிக்க இருப்பது சரியான போட்டியாக இருக்கிறது.

இந்நிலையில் அஜித்தின் புகைப்படத்தை பகிர்த விக்கி தனது இன்ஸ்டா ஸ்டோரி புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த பலரும் வியந்து போயுள்ளனர். அதாவது விக்னேஷ் சிவன், அஜித்தின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அஜித் படத்தில் இருந்து நீக்கிய பின்பும் ஒரு ரசிகனாக அஜித் மீது அவர் அதீத அன்பு செலுத்தி உள்ளதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நெகிழ்ந்து போய் உள்ளனர். அதுமட்டுமல்லாது விக்னேஷ் சிவனின் இந்த நல்ல மனசைப் பாராட்டியும் வருகின்றனர்.இதோ உங்கள் பார்வைக்கு

இதை பார்த்த ரசிகர்கள் ஏகே 62 படத்தை இயக்கவிட்டலாம் அஜித்தின் தீவிர fan boy என புகைப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் நிரூபித்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்

சமீபத்திய கதைகள்