தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
பட்டாசு குடோனில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தீப்பிடித்த குடோனில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டதாகவும், உயிர் பிழைத்தவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த மூவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்