30.5 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாஎதிர்பார்ப்புகளை எகிற வைத்த AK62 ! திரைப்படத்திலிருந்து கிடைத்த தரமான அப்டேட் !! இப்படியொரு கதாபாத்திரத்தில்...

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த AK62 ! திரைப்படத்திலிருந்து கிடைத்த தரமான அப்டேட் !! இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்

Date:

தொடர்புடைய கதைகள்

இறுதி கட்டத்தை நெருங்கும் மாவீரன் படத்தை பற்றிய முக்கிய...

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை முடித்த பிறகு,...

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

மார்ச் 2022 இல், விக்னேஷ் சிவன் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும், #AK62 என குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. பொங்கலுக்குப் பிறகு மாடிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்திற்காக அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் இணைக்கப்பட்டதாக கூட செய்திகள் வந்தன.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியானதால் இந்த இரண்டு படத்திற்கும் போட்டிகள் இருந்தது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் துணிவு படத்தை தொடர்ந்து அஜித் அவருடைய 62வது படம் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதற்கான கதையை தயார் செய்யவில்லை. அதனால் அஜித் 62வது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார் அவர் தடையற்ற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான்.

மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிற.து இந்த படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது இயக்குனராக ஒப்பந்தமாகி இருக்கும் மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்து அறிவிப்பு வெளியான போது 2023 ஆம் வருடம் அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அந்த படம் திரைக்கு வரும் என அறிவித்துவிட்டார்கள்.

அதுபோலவே தன் 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் பொழுது இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவித்த பிறகு படத்தை ஆரம்பிக்க வேண்டும் என அஜித் கூறியுள்ளார். நான்கு மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும் இதில் எவ்வித பிரேக்கும் கொடுக்கக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 62 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஏகே 62 படத்தின் கதை கேஜி எப் பாணியில் இருக்கும் படியான செம்ம மாஸ் ஸ்கிரிப்ட் எனவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது

ஏகே 62 படத்திற்காக அஜித்குமார் விரும்பியதாகக் கூறப்படும் இயக்குனர் விசுவர்தன். அவர் கிடைக்காததால், நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருந்த இயக்குனர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்