சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் வெற்றியில் அஜீத் குமார் ஈடுபட்டுள்ளார். இப்போது, ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள அவரது வரவிருக்கும் படத்தின் அறிவிப்பின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. ஜனவரி 25 முதல், ஏகே 62 படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. அது இப்போது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை இயக்க மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. இந்நிலையில், வெளிவந்த சில நாட்களே ஆகும் நிலையில் இந்தியளவில் முதல் மூன்று இடத்தையும் துணிவு படமே பிடித்துள்ளது.
ஆம், No. 1 – துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன், No.2 – துணிவு தமிழ், No. 3 – துணிவு தெலுங்கு என நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் எப்படி மாஸ் இடத்தில் இருக்கிறாரோ அதேபோல் கன்னட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர் யாஷ். அதுமட்டுமின்றி KGF படத்தினால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் யாஷ் தன்வசம் இழுத்துள்ளார். அதில் அவரது ராக்கி பாய் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படம் அதிக வசூலில் வெற்றி பெற்றது .
இந்நிலையில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 படமும், விஜய்யின் பீஸ்ட் படமும் நேர் எதிராக மோதிக்கொண்டது. ஆனால் இதில் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் சருக்களை சந்தித்தது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் கேஜிஎஃப் 2 படம் நல்ல வசூலை பெற்றது.
மேலும் கே ஜி எஃப் 2 படத்தால் தான் பீஸ்ட் படம் தோல்வியுற்றதாக அப்போது விமர்சனம் பேசப்பட்டது. ஆனால் இப்போது அஜித்தின் துணிவு படத்தை பார்த்துவிட்டு யாஷ் அஜித்துக்கு போன் போட்டு பேசி உள்ளார்.
அதாவது அஜித்திடம் படம் கிளாஸாக இருப்பதாக நெகிழ்ச்சியாக யாஷ் பேசி உள்ளாராம். மேலும் இப்போதே இந்த படம் 100 சதவீதம் வெற்றி உறுதி என்பது போல பல விஷயங்களை அஜித்திடம் பேசியதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அஜீத் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை வரும் வாரங்களில் தொடங்குவார். இதற்கிடையில், வலிமை நடிகரும் இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் ஏகே 63 க்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும், எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் அவரது படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.