Saturday, April 1, 2023

ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்த்த AK62 படத்தை பற்றிய புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜீத் கடைசியாக வெளிவந்த ‘துணிவு ‘ மற்றும் அதிரடி படமான அஜித்தின் அதிக வசூல் செய்த படமாக மாறியது. அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது, மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போது, சமீபத்திய அறிக்கை ‘ஏகே 62’ மேலும் ஒரு திருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வளர்ச்சியில் இயக்குனர் அவர்களை ஈர்க்கத் தவறியதால் தயாரிப்பாளர்களும் அஜித்தும் மனம் மாறினர். ‘அஜித் 62’ படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த ஆச்சரியம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டிலை ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் லியோ படத்தை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் லியோக்கு போட்டியாக தாறுமாறாக அஜித் களமிறங்க போகிறார். இதற்காக ஏகே 62 படத்தின் ப்ரோமோவை இன்னும் ஒரு சில தினத்தில் வெளியிடப் போகின்றனர். மேலும் ஏகே 62 இயக்குனர் மகிழ் திருமேனி இசை சந்தோஷ் நாராயணன் என பேசப்படுகிறது.

ஆனால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. வியாழக்கிழமை ஆன நேற்று இதன் அப்டேட் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. அதனால் வெள்ளி அல்லது சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்காக இந்த காலதாமதம் என்றால் விஜய்யின் லியோ மாதிரியே டைட்டிலுடன் மோஷன் போஸ்டரைம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டம்.

அதனால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கூடிய விரைவில் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இந்த மோஷன் போஸ்டர் அமையும். வெள்ளிக்கிழமை ஆன இன்று இதைப்பற்றி என்னென்ன அப்டேட்டுகள் வரப்போகிறது என்று தெரியும்.

இதனால் தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்புடன் ஏகே 62 படத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். அஜித் இந்த படத்தை லியோவை மிஞ்சும் அளவுக்கு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆகையால் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு பிறகு அஜித், விஜய் இருவரின் போட்டி அணைந்த பாடில்லை.

இப்போதுதான் வேகம் எடுக்கிறது. அதிலும் லோகேஷ் ககனகராஜின் லியோ வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தும் விரைவில் ஏகே 62 படத்தின் முழு விவரம் அடங்கிய போஸ்டரை இன்றுவெளியிடப் போகிறார்.

அஜித் தனது 62 வது படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்வார், மேலும் பிஸியான நடிகர் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்பு நீட்டிக்கிறார்.

சமீபத்திய கதைகள்