Friday, March 31, 2023

அடி தூள் Netflix OTT தளத்தை அதிர வைத்த துணிவு 🔥 !! புதிய ரெக்கார்ட் பிரேக் செய்த டார்க் டெவில் அஜித் !

தொடர்புடைய கதைகள்

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

அஜீத் கடைசியாக பிளாக்பஸ்டர் ஆக்ஷன் படமான துணிவு படம் வெளியானது . மேலும் இந்த படம் வணிகத்தில் நடிகரின் சிறந்த படமாக மாறியது. அடுத்ததாக, அஜித்தின் அடுத்த படத்தைப் பற்றி கேட்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அஜித்தின் 62வது படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்ட விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், படத்திற்கான நடிகர்கள் மற்றும் குழுவினரை இறுதி செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தை பற்றி பரபரப்பாக பேசி வந்தாலும் இன்னும் துணிவு படத்தை பற்றியும் பெரும்பாலான ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதாவது கடந்த பொங்கல் பண்டிகைக்கு வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான துணிவு படம் வெளியானது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் கலையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் அதற்கு நேர் எதிராக துணிவு படத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைத்து வருகிறது. துணிவு படத்திற்கு போட்டியாக வெளியான அனைத்து படங்களின் வசூலை முறியடித்து இப்படம் நல்ல வசூலை பெற்றது.

மேலும் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. அதாவது துணிவு படத்திற்கு தியேட்டரில் மட்டும் அல்லாமல் ஒடிடியிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. நெட்பிளிக்ஸில் துணிவு பட டார்க் டெவில் அஜித் ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒடிடியில் துணிவு படம் வெளியாகி இருந்தது. இதுவரை நெட்பிளிக்ஸில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இவ்வளவு வாடிக்கையாளர்கள் எந்த படத்தையும் பார்த்ததில்லை.

ஆனால் திரையரங்குகளில் வெளியான பின்பு தான் ஒடிடியில் துணிவு படம் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருந்து உள்ளனர். அதனால் தான் படம் வெளியான உடனே நெட்பிளிக்ஸை ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். மேலும் துணிவு படத்தின் மூலம் நெட்பிளிக்ஸ் நல்ல லாபத்தை பார்த்து வருகிறது.

அதுமட்டுமின்றி தற்போது அஜித்துக்கு துணிவு படத்தின் வெற்றியின் மூலம் மார்க்கெட் மற்றும் சம்பளம் எகிறி உள்ளது. இதனால் தற்போது அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாம். மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் முன்கூட்டியே சூதானமாக நெட்பிளிக்ஸ் கை பற்றியது.

‘அஜித் 62’ துணிவு படத்தை போலவே குறிகிய கால நிலையில் எடுக்கப்படும் என தெரிகிறது , மேலும் பட வேலைகளை ஒரே நீட்டிப்பில் முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு பெரிய திரைகளில் வரக்கூடும், மேலும் ‘ஏகே 62’ பூஜை விடுமுறைக்கு ‘லியோ’வுடன் அதன் கொம்பு பூட்டப்பட்டால் பாக்ஸ் ஆபிஸில் மேலும் ஒரு அஜித்-விஜய் மோதலை எதிர்பார்க்கலாம். இப்படத்தை அதிகாரப்பூர்வமாக எடுக்க அஜித், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அடங்கிய படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்