32 C
Chennai
Saturday, March 25, 2023

அதிரடியாக AK62 படத்தில் கமிட் ஆன முக்கிய பிரபலம் !! அஜித் செய்த சிபாரிசு!வைரல் வீடியோ

Date:

தொடர்புடைய கதைகள்

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை...

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை...

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

அஜித் கடைசியாக நடித்து வெளிவந்த ‘துனிவு’ மற்றும் அதிரடிபடம் நடிகரின் அதிக வசூல் செய்த படமாக மாறியது. அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது, மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போது, சமீபத்திய அறிக்கை ‘ஏகே 62’ மேலும் ஒரு திருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் வளர்ச்சியில் இயக்குனர் அவர்களை ஈர்க்கத் தவறியதால் தயாரிப்பாளர்களும் அஜித்தும் மனம் மாறினர். ‘அஜித் 62’ படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


அஜித் 62 திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு படம் வெளியானதும், அஜித்தின் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று பரவலாக பேசப்பட்டது.ஏகே62 படத்தின் லொகேஷன் பார்க்க மனைவி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் வெளிநாட்டுக்கு சென்று வந்ததாகவும் சொல்லப்பட்டது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ந் தேதி வெளியானது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன்,அமீர், பாவ்னி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 28 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனும் இதனை உறுதி செய்திருந்தார்.ஏகே 62 என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், Ak 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும், விக்னேஷ் சிவன் தயார் செய்து வைத்திருந்த கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிடிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மகிழ்திருமேனியுடன் கை கோர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் ஏன்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அஜித் 62 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது.


இந்நிலையில் அஜித் 62 படத்தில் டான்ஸ் மாஸ்டராக பிக்பாஸ் பிரபலம் அமீர் கமிட் ஆகியுள்ளாராம் .ஏற்கனவே இவர் துணிவு படத்தில் அஜித் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

துணிவு படத்தின் போதே அமீர் வாழ்க்கையில் நடந்த சோக கதையை கேட்டு அஜித்தே இந்த வாய்ப்பை கொடுத்துஉள்ளாராம் என்ற தகவலும் அப்போதே வைரலாகி வந்தன இந்நிலையில் நேற்று அவர் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

சமீபத்திய கதைகள்