28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

போடுறா வெடிய நாளை அஜித் ரசிகர்களுக்கு திருவிழா தான் !! AK62 பற்றிய மிக பெரிய சர்ப்ரைஸ் இதோ!!

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

துணிவுக்குப் பிறகு அஜித்குமார் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்காலிகமாக ‘AK62’ என்று அழைக்கப்படும், பெரிய அளவிலான திட்டம் இந்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் திரைப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அஜித் 62 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் 62-ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், கடந்த ஆண்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன் பிறகு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருந்த நிலையில், சில காரணங்களால், லைகா புரொடக்ஷன்ஸ் ak62இயக்குநரை மாற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்தவகையில் ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டார் என்று பலரும் உறுதியாக கூறி வருகிறார்கள்.


மேலும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி தான் இப்படத்தை இயக்கவுள்ளார் என்றும், அஜித் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் AK62 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் தற்போது ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.

அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டுமே அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி சேர இருப்பது உறுதியாகும். அதுமட்டுமல்லாது படத்தில் யாரெல்லாம் பணியாற்ற இருக்கிறார்கள் என்பதை அறியவும் தல ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்திருக்கின்றது. அத்தகவலின் படி AK62 அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை தான் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

அஜித் 62 படத்தின் டைட்டிலுடன் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது ‘தடம்’ புகழ் அருண்ராஜ் AK62 படத்திற்கு இசையமைப்பார் என்று முன்னதாகவே கூறப்பட்டது. இப்போது, ​​அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படத்திற்கான அசல் ஒலிப்பதிவை சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாய்ப்புள்ளது என்று கேள்விப்படுகிறோம். AK62 அஜித் மற்றும் சனாவின் முதல் கூட்டணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமன் AK62 க்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

சமீபத்திய கதைகள்