அஜித்குமார் சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் வெற்றியில் மும்முரமாக இருக்கிறார். இப்போது, ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் அவரது வரவிருக்கும் படத்தின் அறிவிப்பின் மீது அனைவரது பார்வையும் உள்ளது. ஜனவரி 25 முதல், ஏகே 62 படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. அது இப்போது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை இயக்க மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் தலை சிறந்த நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் ‘துணிவு’ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தின் உடைய வெற்றிக்கு பின்னர் அஜித் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுப் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருக்கின்றார்.
அதாவது லண்டன், போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்கு சென்ற அஜித், தற்போது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இருக்கின்றார். அங்கு அவர் தனது ரசிகர்களுடன் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தற்போது அஜித்தை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவொன்றினை பகிர்ந்துள்ளார். அதாவது ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கவ் நகரில் அஜித் தங்கி இருப்பது தெரிய வந்ததும், அப்பகுதியின் அருகே தங்கியிருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு அஜித்தை சந்திக்க ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி சென்றாராம்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் குறிப்பாக 15 நிமிட தேடலுக்கு பின்னர் அஜித் அங்குள்ள காபி கடை ஒன்றில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அஜித்திற்கு அருகில் செல்ல தயக்கத்துடன் கொஞ்சம் தூரமாக நின்றுகொண்டிருந்த அவர்களை பார்த்ததும் அஜித் உடனடியாக அழைத்து பேசினாராம். அதுமட்டுமல்லாது அவர்களிடம் நலம் விசாரித்த அஜித், பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம்.
1kms we run fast to that location thala isnt there We searching him for 15 mins we found out him in Costa coffee he was drinking tea he didnt see us for 5 mins then he turned to be us and he shook his head and called us. I went to him and asked (2)E
— Suriya Cristiano Kohli (@Virat18Suriya23) February 9, 2023
இறுதியாக 5 நிமிட உரையாடலுக்கு பின் அஜித்திடம் நேராகவே அப்டேட் எதாவது இருக்கா தல என அந்த ரசிகர் கேட்டுள்ளார். அந்த கேள்வியை கேட்டதும் “இதற்கு இப்போ”.. என “பிரேக் வேணும்பா” என இழுத்து சொல்லி விட்டாராம் அஜித்.
#Thunivu nalla irundhichu thala climax andha mask potu nadandhu varathu sema mass nu sonen athuku avaru nalla irundhicha thanks pa nu sonaru last la porapa handshake pani nalla padingha best of luck nu sollitu thumbs up panitu ponaru
— Suriya Cristiano Kohli (@Virat18Suriya23) February 9, 2023
திரையுலகில் மிகப்பெரிய செலிபிரிட்டியாக இருக்கும் அஜித், அந்த அந்தஸ்தை வைத்து பந்தா பண்ணாம செம்ம ஜாலியாக தங்களுடன் உரையாடியதாக அந்த ரசிகர் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அஜித் தற்போது பிரேக் வேணும் என சொல்லியதைப் பார்த்தால் தற்போதைக்கு ஏகே 62 அப்டேட் வெளியாக வாய்ப்பில்லை போல தெரிவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
அஜீத் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை வரும் வாரங்களில் தொடங்குவார். இதற்கிடையில், வலிமை நடிகரும் இயக்குனர் விஷ்ணுவர்தனுடன் ஏகே 63 க்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும், எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் அவரது படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.