29.4 C
Chennai
Sunday, March 26, 2023

அதிரடியாக Ak62 படத்தில் புதிதாக இணைந்த புதிய பிரபலம் !! அட இவருமா ? தியேட்டர் கிழிய போறது உறுதி

Date:

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் நீண்ட ஷெட்யூல்...

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

நாட்டின் மிகப்பெரிய கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா, அதிக ரசிகர்களைக் கொண்டவர். அவர்...

பத்து தல படத்தின் ‘ரவுடி’ வீடியோ பாடல்...

சிலம்பரசன் நடித்த 'பாத்து தலை' படம் மார்ச் 30 ஆம் தேதி...

தனது தந்தை இறந்த துக்கத்தில் அஜித் செய்த அந்த...

அஜித்குமாரின் தந்தை இன்று காலமானதையடுத்து, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில்...

வரலக்ஷ்மி ஆரவ் நடிக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

அவரது சமீபத்திய குற்ற நாடகம் கொண்டரால் பாவம் வெற்றிக்குப் பிறகு, வரலட்சுமி...

அஜீத் குமாரின் அடுத்த படம் பிப்ரவரியில் தொடங்குவதாக இருந்தது, ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென திட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் நடிப்பதாக கூறப்பட்ட ஏகே62 தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் மூலம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மற்றொரு புதிய சாதனையும் நிகழ்ந்துள்ளது. ஆம், துணிவு படத்தின் மூலம் ரூ. 110 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளதாம்.இதன்முலம் முதல் முறையாக ரூ. 100 கோடியை கடந்து ஷேர் கொடுத்த படம் என்ற சாதனையையும் துணிவு செய்துள்ளது.தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வரும் துணிவு விரைவில் ரூ. 300 கோடியை எட்டும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

நடிகர் அஜித்குமார் கலந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார் அந்த வகையில் இளம் இயக்குனர் ஹச். வினோத்துடன் தொடர்ந்து மூன்று படம் பண்ணினார் அதில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது.

அதன் காரணமாக உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் வசூலில் அள்ளி வருகின்றன இதனால் படம் பிளாக்பஸ்டர் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் சூப்பராக ஓடிக் கொண்டும் இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே சொல்லப்பட்டது.

ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதை லைகா நிறுவனத்திற்கு பிடிக்காததால் அவரை தூக்கி விட்டு பதிலாக ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனர் மகிழ் திருமேனியை போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இயக்குனர் மகிழ் திருமேனி லண்டனுக்கு சென்று லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

அது சுமுகமாக முடிந்ததை எடுத்து அவருக்கு 50 லட்சம் அட்வான்ஸ் தொகை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே இந்தக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் மகிழ்திருமேனி தற்பொழுது படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், கேமராமேன் என ஒவ்வொருவரையும்பார்த்து பார்த்து தட்டித் தூக்கும் முயற்சிகள் இருக்கிறாராம்.

அதன் படி தற்போது சில தகவல்களும் வந்துள்ளது .நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கமிட் ஆகியுள்ளாராம் . மேலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக இளம் நடிகை அதிதி ராவ் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஏகே 62 படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக அனல்அரசு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன .ஏகே 62 படத்தின் அதிகாரபூர்வ செய்தி நாளை வெளியாகலாம் என தகவல் வருகின்றன .

அஜித்குமார் சில நாட்களுக்கு முன் லண்டனுக்கு பறந்தார், ஜனவரி 28 அன்று விக்னேஷிடம் ஏகே 62 நடக்கவில்லை என்று செய்தி வெளியானது. அவர் லைகா புரொடக்‌ஷன் போஸ்டுடன் ஒரு சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது, இந்த செய்தி கசிந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் நிலைமையை தெளிவுபடுத்தவும், தனது படம் கைவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் லண்டனுக்கு பறந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்