28.3 C
Chennai
Thursday, March 23, 2023

இளம் வயது நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக 20 வயது பெண்ணாக மாறிய நடிகை ஜோதிகா!

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

நடிகை ஜோதிகா 20 வயது பெண் போன்று தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஜோதிகா
சூர்யா மற்றும் ஜோதிகா படத்தில் ஜோடியாக நடித்த போது காதலித்து பின்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஜோதிகா சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். பின்பு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தையும், பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

ஜோதிகா கடைசியாக அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்த நிலையில், தற்போது மலையாளத்தில் மம்மூடிக்கு ஜோடியாக காதல் தி கோர் என்கிற படத்திலும் ஹிந்தியில் ஸ்ரீ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

20 வயது பெண்ணாக மாறிய ஜோதிகா
படங்களில் நடிப்பதையும் தாண்டி தற்போது தனது கணவர் சூர்யாவுடன் சேர்ந்து பட தயாரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஜோதிகா, புத்தம் புதிய ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதனை அவதானித்த ரசிகர்கள், உண்மையில் இது ஜோதிகாவா… அல்ல அவருடைய மகளா என்று கூட கேள்வி எழுப்பி வருவதுடன் வைரலாக்கியும் வருகின்றனர்.

ஏனெனில் குறித்த புகைப்படத்தில் ஜோதிகா மிகவும் வயது குறைந்து காணப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.

சமீபத்திய கதைகள்