Tuesday, April 16, 2024 9:52 am

மகிழ் திருமேனிடம் நடிகர் அஜித் சொன்ன விஷயம்.! என்ன தெரியுமா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் பொதுவாகவே தான் நடிக்கும் படங்களின் கதை, காட்சிகள், வசூல் உள்ளிட்டவைகளை கவனமாக பார்த்து படங்களில் கமிட்டாக கூடியவர். இதில் எதாவது ஒன்று சரியில்லை என்றாலும் அப்படத்திலிருந்து அவரோ அல்லது சக பிரபலங்களையோ எதை பற்றியும் யோசிக்காமல் நீக்கிவிடுவார். உதாரணமாக அஜித்தின் ஏகே62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவனின் கதை, அஜித்துக்கு பிடிக்காமல் போக அவரையே இப்படத்திலிருந்து விலக்கினார் அஜித்.

அந்த அளவிற்கு ஒரு படத்தில் நடிக்க அஜித் பல விஷயங்களை பார்த்து, பார்த்து செய்யக்கூடியவர். அந்த வகையில் தற்போது ஏகே62 படத்தில் புதிதாக இணைந்துள்ள இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திடம் கதை கூறி சம்மதம் வாங்கியுள்ளார். இருந்தாலும் இப்படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வரமால் உள்ளது பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா தான் ஏகே62 படத்தின் அப்டேட்டை தராமல் உள்ளது என பலரும் நினைத்த நிலையில், இதற்கான காரணம் அஜித் தான் என செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசத்தை காண்பிக்க வேண்டி பல முயற்சிகள் எடுப்பார். உதாரணமாக உடலை குறைப்பது, அதிகரிப்பது, தனது முகம், தாடி, மீசை உள்ளிட்டவை மெருகேற்றுவது என அனைத்தும் செய்வார்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே பல கண்டிஷன்களை போட்டுவிட்டு சம்மதம் வாங்கிவிட்டு தான் அப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்வார். அந்த வகையில் ஏகே 62 படத்தை இயக்க உள்ள மகிழ் திருமேனிக்கு, அஜித் புது கண்டிக்ஷன் ஒன்றை போட்டுள்ளார். இயக்குனர் மகிழ்திருமேனி இதுவரை கழகத்தலைவன், தடம், உள்ளிட்ட 5 படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

இதில் அஜித்திற்கு பிடித்த படங்கள் என்றால் அருண்விஜய் நடித்த தடம் மற்றும் தடையறத் தாக்க திரைப்படம் தான். இப்படங்களில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லாத போதும் இரு படங்களும் வேற லெவல் ஹிட் எனலாம். ஆனால் அஜித்தின் படங்கள் என்றாலே ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு குறைவே இருக்காது. அந்த வகையில் மகிழ்திருமேனி அஜித்திடம் சொன்ன முழு கதையில் ஆக்ஷன் காட்சிகள் கம்மியாக உள்ளதாக அஜித் தெரிவித்தாராம்.

இதனிடையே துணிவு படம் போல் படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அக்ஷன் காட்சிகள் இருப்பது போல, படத்தின் கதையை மெருகேற்றுங்கள் என அஜித் மகிழ்திருமேனியிடம் கண்டிஷனுடன் தெரிவித்துள்ளாராம். அஜித்தின் இந்த கண்டிஷனுக்கு சம்மதம் தெரிவித்த மகிழ் திருமேனி, தற்போது இப்படத்தின் கதையை அதிக ஆக்ஷன் கலந்து மெருகேற்றி வருகிறாராம். இதன் காரணமாகத்தான் ஏகே62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் அஜித் மகிழ் திருமேனிடம் சொன்ன விஷயம் குறித்து மகிழ்திருமேனி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நாம் செய்யும் வேலையை எப்போதும் கொண்டாட வேண்டும் எனவும், ஒரு வேலையை செய்யும் அனைவரும் அந்த வேலையை உற்சாகமாக செய்தால் அந்த வேலை நிச்சயமாக வெற்றி பெற்றுவிடும்.

ஒரு படமாக இருந்தாலும் சரி அதில் வேலை செய்யும் தடை நில ஊழியர்களாக இருந்தாலும் அது தனது படம் என்று உற்சாகமாக செய்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அஜித் சொன்னதாக இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

மகிழ் திருமேனி படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோர் இந்த விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். மகிழ் திருமேனியின் முந்தைய படங்கள் தடம் மற்றும் கலக தலைவன். செல்வ ராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

வதந்திகளின்படி, விக்னேஷ் சிவன் கூறிய திரைக்கதையில் அஜித் திருப்தியடையவில்லை, மேலும் மாற்றங்களைக் கோரினார். தளபதி விஜய்யின் தளபதி67 படத்தின் ஹைப்பை லோகேஷ் கங்கராஜுடன் பொருத்த அஜித் தனது அடுத்த படத்தை இயக்க ஒரு நட்சத்திர இயக்குனரைப் பெற விரும்புவதாக மற்ற தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்