அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.
சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால் மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணி இணைவது தான். ஏனென்றால் இதுவரை மகிழ்திருமேனி பெரிய நடிகர்களின் படங்களை இயக்கியது இல்லை. இப்படி இருக்கையில் அஜித் இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது மகிழ்திருமேனி பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லை என்றாலும் அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதிலும் குறிப்பாக தடம் மற்றும் தடையற தாக்க படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.
இவ்வாறு அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்போதும் நிலைத்து நிற்க மகிழ்திருமேனி ஒரு முக்கிய காரணமாக உள்ளார். அதுமட்டுமின்றி தளபதி விஜய்க்கு மகில் திருமேனி இரண்டு கதை சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு கதையுமே விஜய்க்கு ரொம்ப பிடித்து போய் விட்டதாம்.
ஆனால் அந்த சமயத்தில் உதயநிதியின் கலகத் தலைவன் படத்தை மகிழ் இயக்கிக் கொண்டிருந்தார். இந்த படம் சில நாட்கள் இழுத்தடித்துக் கொண்டே போனதால் விஜய்யின் படத்தை அவரால் இயக்க முடியாமல் போய்விட்டது. இந்தப் படத்தை முடித்த கையோடு விஜய் இடம் சென்ற போது தளபதி அப்போது பிஸியாகிவிட்டார்.
ஆகையால் மகிழ்திருமேனி, விஜய் கூட்டணி தற்போது வரை அமையாமல் போனது. அதன் பிறகு தான் அஜித், விக்னேஷ் சிவன் கூட்டணி சமீபத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில் மகழ் திருமேனி அஜித்திடம் கதை சொல்லி உள்ளார். கதையைக் கேட்டவுடன் அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டாராம்.
இப்போது அஜித், மகிழ் திருமேனி, லைக்கா கூட்டணி கிட்டதட்ட உறுதி ஆகி உள்ளது. அதுமட்டுமின்றி அட்வான்ஸ் தொகையையும் இயக்குனருக்கு லைக்கா கொடுத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் சில தினங்களில் அறிவிக்க உள்ளனர்.
அவருக்குப் பதில் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் லண்டனில் இருக்கும் அஜித்தை சந்திக்க மகிழ் திருமேணி, லைகா குழுவோடு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு அஜித் மற்றும் லைகா குழுவை சந்தித்து கதையை சொல்ல உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் இதில் வேறொரு மகிழ் திருமேனியின் ஆக்சன் அதிகமாக டச் இருக்கும் என்று மட்டும் கூறுகின்றனர்.தற்போது படம் குறித்து நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால், படத்தில் அஜித் செம வில்லனாக சில காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மங்காத்தாபடத்தை மிஞ்சும் அளவிற்கு கதைக்களம் போல இதில் அஜித் கதாபாத்திரம் இருக்கும் என்கின்றனர்.
கடைசியாக எச் வினோத் மற்றும் போனி கபூரின் துணிவு படத்தில் நடித்த அஜித் குமார் தற்போது தனது அடுத்த திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். விக்னேஷ் சிவனுடன் தனது அடுத்த படமான ஏகே 62 இல் பணியாற்ற அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார். இருந்தபோதிலும், கலை பார்வையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக ஏகே 62 இன் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் அடுத்த படம் ஏ.கே.62. லைகா புரொடக்ஷன்ஸ் இந்த திட்டத்திற்கான தயாரிப்பை மிகப்பெரிய அளவில் கையாளவுள்ளது.