Thursday, April 25, 2024 6:21 pm

வாரிசு படத்தை விட 85 தியேட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தில் துணிவு😎 !! ரியல் ஆட்டநாயகனாக மாறிய அஜித் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் நடித்த ‘துணிவு’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடியதைத் தொடர்ந்து OTTயில் ஒளிபரப்பாகிறது. இந்த திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது என்றும் நெட்ஃபிக்ஸ் இல் அறிமுகமாகும் என்றும் வதந்திகள் வந்துள்ளன, மேலும் ஸ்ட்ரீமிங் சேவை இப்போது அந்த வதந்திகளை உறுதிப்படுத்தி சரியான தேதியை அறிவித்துள்ளது.

செய்தியைப் பகிர்ந்துகொண்டு, நெட்ஃபிக்ஸ் எழுதியது, “வெடிப்பு தொடங்குவதற்கான நேரம் இது, ஏனென்றால் அஜித்குமார் இறுதியாக வந்துள்ளார்! தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்து மொழிகளில் பிப்ரவரி 8 ஆம் தேதி Netflix இல் திநிவு வருகிறது, மேலும் நாங்கள் சில்லா சில்லாவாக இருக்க முடியாது!

ஜனவரி 11-ம் தேதி பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. அதிலும் பக்கா குடும்பம் சென்டிமென்ட் படமான வாரிசு பேமிலி ஆடியன்ஸை திரையரங்குகளில் சாரை சாரையாக அணி வகுக்க செய்தது.

அதே சமயம் இளசுகள் விரும்பும் வகையில் பக்கா ஆக்சன் படமாக இருந்த துணிவு படத்திருக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக்கொள்ளும் தல தளபதி இருவரில் யார் படத்திற்கு அதிக வசூல்? யார் பாக்ஸ் ஆபிஸ் நாயகன்? என்பதை தெரிந்து கொள்ள சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்கள் மல்லு கட்டுகின்றனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு வாரம் முடிவில் 100 கோடி வித்தியாசத்தில் வாரிசு படம் தான் முன்னிலை வகுத்தது. ஆனால் இப்போது நிலைமையை தலைகீழாக மாறி இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி 25-வது நாளை எட்டிய நிலையில், 85 தியேட்டர் வித்தியாசத்தில் இப்போதும் திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பது அஜித்தின் துணிவு.

அதாவது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் தற்போது 149 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் தமிழகத்தில் இப்போது 234 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வாரிசை மிஞ்சி கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் யார் ரியல் வின்னர் என்பது தெரிந்துவிட்டது. ஏனென்றால் படத்தின் வசூலை காட்டிலும் எந்த படம் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடுகிறது என்பதுதான் ஆட்ட நாயகனுக்கு அழகு. ஆகையால் துணிவு ரிலீஸ் ஆகி 25 ஆவது நாட்களில் வாரிசை விட 85 தியேட்டர்களில் அதிகமாக வெற்றி நடை போடுகிறது.

இந்த விஷயத்தை வைத்து தல ரசிகர்கள் சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அஜித், விஜய் பொருத்தவரை அவர்கள் அடுத்த படத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றனர். விஜய் லியோ படத்தில், அஜித் ஏகே 62 படத்திலும் நடிக்க கிளம்பிவிட்டனர். ஆனால் இவர்களது துணிவு மற்றும் வாரிசு படத்தை குறித்து பரபரப்பு இப்போது வரை குறையாமல் இருக்கிறது.

அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், மமதி சாரி, அஜய், வீரா, பகவதி பெருமாள், தர்ஷன், பவானி ரெட்டி, சிபி, அமீர் ஆகியோரும் ‘துனிவு’ படத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்