32 C
Chennai
Saturday, March 25, 2023

அட்ரா சக்க! சிறப்பான தரமான 2 சம்பவம் தயார்! ஏகே 62 சும்மா தெறிக்க போகுது.! வெளியான வெறித்தனமான அப்டேட்.

Date:

தொடர்புடைய கதைகள்

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

ஏகே 62 படத்தை பற்றி லைகாவிடம் அஜித் கூறிய...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்ததில் இருந்து, அவ்வப்போது நட்சத்திர நடிகருடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். நடிகர் அஜித்குமார் தனது சமீபத்திய திரைப்படமான ‘துனிவு’ வெற்றிக்குப் பிறகு தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் போது, ​​ஷாலினி அஜித் ஸ்டைலான நடிகரின் இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார்.


தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடன் நடித்த ஷாலினியை திருமணம் செய்துக் கொண்டார் அஜித். இவர்களுடைய வாழ்க்கை மிகவும் இனிமையாக கழிந்துவரும் நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஷாலினி இணைந்துள்ளார். தானும் தன்னுடைய கணவர் அஜித்தும் இணைந்துள்ள புகைப்படங்களை இவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவர் அஜித்தை தான் அழகாக படம்பிடித்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷாலினி பகிர்ந்துள்ளார். பின்புலத்தில் அழகான சூரிய உதயத்தையும் சேர்த்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலாக காணப்படுகிறார்.

மேலும் தன்னுடைய சூரிய ஒளி என்றும் தன்னுடைய கணவர் அஜித்தை ஷாலினி குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த இரு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு டிடி உள்ளிட்டவர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்கிகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கவில்லை என்பது தற்போது உறுதியாகிவிட்டது. ஆகையால் லைக்கா விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தனர்.

அந்த வகையில் விஷ்ணுவர்தன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரின் பெயர் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வந்தது. மேலும் லைக்கா உடன் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு நேற்று லண்டனில் இருந்து திரும்பிய விக்னேஷ் சிவன் முதலாவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏகே 62 பெயரை நீக்கினார்.

இதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனம் ஏகே 62 படத்தின் இயக்குனரை அறிவிக்க இருக்கிறது. அதாவது தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகழ்திருமேனி ஏகே 62 படத்தை இயக்க போகிறார் கிட்டத்தட்ட 100% உறுதியாகியுள்ளது.

தற்போது லண்டன் சென்றுள்ள மகிழ்திருமேனி லைக்கா நிறுவனத்திடம் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கடைசியில் சுமூக முடிவு ஏற்பட்டதால் 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை லைக்கா நிறுவனம் மகிழ்திருமேனிக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகிழ்திருமேனி அருண் விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நிலையில் அஜித்துக்கு நல்ல கதையை ரெடி செய்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி ஏற்கனவே விஜய்க்கு மகிழ்திருமேனி ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக் கதையில் தான் தற்போது அஜித் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் மகிழ்திருமேனியின் படங்களில் அருண் ராஜா இசையமைத்து வந்த நிலையில் ஏகே 62 படத்தில் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். சமீபகாலமாக இவருடைய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஆகையால் இந்த காம்போவில் ஏகே 62 படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் நடிக்க உள்ளாராம் .தற்போது வெளியான தகவலின்படி இந்த திரைப்படத்தில் பாடல்களே கிடையாதாம். அந்த அளவுக்கு கதை விருவிருவென இருக்குமாம் இந்நிலையில் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 9 ஆம் தேதியன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது .

இதனைக்கேட்ட ரசிகர்களுக்கு முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு பாடல்கள் இல்லாமல் வெளியாகிறது. அதுவும் முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ்திருமேனியின் விறுவிறுப்பான திரைக்கதையின் உருவாகிறது என்ற எதிர்பார்ப்பே தற்போது அதிகமாகி உள்ளது. திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் ‘AK62’ படத்தை இயக்கவிருந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டு அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணையலாம் என்பது சமீபத்திய சலசலப்பு. ஓரிரு நாளில் வெளியாகும் ஏ.கே.62 அப்டேட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்