28.3 C
Chennai
Thursday, March 23, 2023

ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் !ஏகே 62 ல் ஹீரோயின் யார் தெரியுமா? அட அவங்க செம க்யூட் ஆச்சே!…

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

விக்னேஷ் சிவன் இயக்குனராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளராகவும் பல மாதங்களுக்கு முன்பு ‘ஏகே 62’ அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், எட்டு மாத ப்ரீ புரொடக்ஷனுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் கொண்டு வந்த ஸ்கிரிப்ட் அஜித் மற்றும் லைகாவை ஈர்க்கவில்லை என்று வதந்திகள் தொடங்கின. வெற்றிப் படங்களின் இயக்குனர் தனது சமூக ஊடக பயோவை மாற்றியமைத்ததன் மூலம் மற்றும் திரைப்பட அறிவிப்பு ட்வீட்டை நீக்குவதன் மூலம் திட்டத்திலிருந்து மறைமுகமாக விலகிவிட்டார்


அந்த வகையில் விஷ்ணுவர்தன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரின் பெயர் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வந்தது. மேலும் லைக்கா உடன் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு நேற்று லண்டனில் இருந்து திரும்பிய விக்னேஷ் சிவன் முதலாவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏகே 62 பெயரை நீக்கினார்.

இதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனம் ஏகே 62 படத்தின் இயக்குனரை அறிவிக்க இருக்கிறது. அதாவது தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகழ்திருமேனி ஏகே 62 படத்தை இயக்க போகிறார் கிட்டத்தட்ட 100% உறுதியாகியுள்ளது.

தற்போது லண்டன் சென்றுள்ள மகிழ்திருமேனி லைக்கா நிறுவனத்திடம் இறுதிகட்ட ஸ்கிரிப்ட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கடைசியில் சுமூக முடிவு ஏற்பட்டதால் 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை லைக்கா நிறுவனம் மகிழ்திருமேனிக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகிழ்திருமேனி அருண் விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நிலையில் அஜித்துக்கு நல்ல கதையை ரெடி செய்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி ஏற்கனவே விஜய்க்கு மகிழ்திருமேனி ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக் கதையில் தான் தற்போது அஜித் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் மகிழ்திருமேனியின் படங்களில் அருண் ராஜா இசையமைத்து வந்த நிலையில் ஏகே 62 படத்தில் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். சமீபகாலமாக இவருடைய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஆகையால் இந்த காம்போவில் ஏகே 62 படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அந்த வகையில் லைக்கா எப்போது வேண்டுமானாலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள். அந்த அறிவிப்பின் போது ரசிகர்கள் எதிர்பார்க்காத சில சர்ப்ரைஸ்களும் வெளிவர இருக்கிறதாம். அது மட்டுமல்லாமல் வரும் தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளிவர திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதனால் விரைவில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பல குளறுபடியில் இருந்து வந்த ஏகே 62 தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அந்த வகையில் துணிவு திரைப்படத்தை காட்டிலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் தீவிரம் காட்டி வருகிறாராம்.

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிக்கவுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடிக்க துவங்கியவர். பின்னர் செக்க சிவந்த வானம், சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார். செம அழகாக இருப்பார் என்பதால் அவருக்கும் அஜித்துக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருக்கும் என நம்பப்படுகிறது.அதாவது, அஜித்தின் 62 – வது திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்