32 C
Chennai
Saturday, March 25, 2023

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஏகே 62 படத்தில் இரண்டு இயக்குனர்களா !! லியோவை மிரட்ட லைக்கா போடும் திட்டம்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

ஏகே 62 படத்தை பற்றி லைகாவிடம் அஜித் கூறிய...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள அஜீத் தனது அடுத்த படத்திற்காக பணியாற்றத் தயாராகிவிட்டார். முன்னதாக, விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து புதிய படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது, ஆனால் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஸ்கிரிப்டில் திருப்தி அடையவில்லை என்று கூறப்பட்டது. ‘ஏகே 62’ படத்திற்காக விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக உதயநிதி ஸ்டாலினின் ‘கலக தலைவன்’ படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜீத் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவனுக்கு பிறகு யார் இயக்குனர் என்று பிரச்சினை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் மகிழ் திருமேனி பெயர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இப்போது மகிழ் திருமேனிக்கு போட்டியாக ஏகே 62 படத்தில் இயக்குனர் ஒருவர் லிஸ்டில் உள்ளார்.

ஏனென்றால் வாரிசு படத்திற்குப் பிறகு விஜய் லோகேஷின் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் அடங்கிய ப்ரமோ வீடியோ நேற்று வெளியாகி சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் லியோவை டார்கெட் செய்து லைக்கா மாஸ் இயக்குனரை களத்தில் இறக்கி விட திட்டம் போட்டுள்ளது.ஆனால் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இப்போது புதிதாக வெங்கட் பிரபுவும் இதில் இணைந்துள்ளார். ஆனால் வெங்கட் பிரபுவிற்கு அஜித் இன்னும் ஓகே சொல்லவில்லை. மகிழ் திருமேனியா அல்லது வெங்கட் பிரபுவா இல்லை வேறு இயக்குனரா என்ற விடை மிக விரைவில் அறிவிக்கக்கூடும்.

மேலும் லைக்கா சுபாஷ்கரனின் மேனேஜர் வெங்கட் பிரபுவுக்கு நெருங்கிய நண்பர். அவரும் அஜித் மற்றும் சுபாஷ்காரனிடம் வெங்கட் பிரபுவை சேர்க்க சொல்லி பேசி வருகிறாராம். இதைப் போன்று அஜித்தின் பில்லா 2, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தனை ஏகே 62 படத்தை இயக்குவதற்காக லைக்கா அணுகியது.ஆனால் விஷ்ணுவர்தன் ஏற்கனவே சல்மான் கான் படத்தில் கமிட்டாகி விட்டார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஷேர்ஷா படம் ஹிந்தியில் நல்லா போனதால், விஷ்ணுவர்தனுக்கு அங்கே ஒரு மார்க்கெட் உருவாகி உள்ளது. அடுத்து பாலிவுட்டில் விஷ்ணுவர்தன் இயக்கும் சல்மான் கானின் படத்தின் படப்பிடிப்பும் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது.

ஆகையால் விஷ்ணுவர்தன் ஏகே 62 படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. இதைத் தவிர மகிழ் திருமேனி அல்லது வெங்கட் பிரபு இருவருள் ஒருவர் தான் ஏகே 62 படத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இருவருள் யார் என்பதை கூடிய விரைவில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மித்ரன் எழுதிய கதையில் அஜித் நடிக்க இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக ஒப்பந்தம் நடைபெற்று உள்ளதாக தெரிகிறது பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

இதற்கிடையில், விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்தை இயக்கவில்லை என்றாலும், நடிகரின் திருப்திக்கு திரைக்கதையை உருவாக்கிய பிறகு அவர் அஜித்துடன் ‘ஏகே 63’ படத்திற்காக பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக மார்ச் 18 அன்று, இயக்குனர் இன்ஸ்டாகிராமில் அஜித்துடன் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் நடிகருக்கும் நன்றி தெரிவித்தார். இனி நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்றும் தனது கனவுகள் நனவாகும் என்றும் எழுதியுள்ளார்.

சமீபத்திய கதைகள்