32 C
Chennai
Saturday, March 25, 2023

வேற லெவலில் உருவாகும் அஜித்தின் AK62 படம் !! வில்லன் இவரா ! மகிழ் திருமேனி யூனிவெர்ஸ் ஸ்டார்ட் !

Date:

தொடர்புடைய கதைகள்

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

யார் இந்த பெசன்ட் ரவி ? இறுதி வரை...

சூப்பர் ஸ்டார் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் வெள்ளிக்கிழமை...

துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

துல்கர் சல்மான் தனது 28 வயதில் திரைப்படத்தில் அறிமுகமானார், பல நட்சத்திர...

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ள அடுத்த படத்தில் இணைவதாக அஜித்குமார் அறிவித்தார். ஆனால், கடந்த சில நாட்களாக அஜித், விக்னேஷ் படம் தள்ளிப்போனதாகவும், ஏகே 62 படத்துக்கு புதிய இயக்குனர் களமிறங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி இயக்குனர் மகிழ் திருமேனி முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில், ஏகே 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் உடன்பாடில்லை என்பதால் மகிழ் திருமேனி இயக்குநராக கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. துணிவு படத்தில் தரமான ஹிட் கொடுத்த அஜித், அடுத்து தனது 62வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ரெடியாகிவிட்டார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக விக்கி சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் திருப்தி இல்லையென்று சொல்லப்படுகிறது. அதனால் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி சொன்ன கதையில் அஜித் நடிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஏகே 62 ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி சீனில் வந்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அஜித்தே எதிர்பார்க்காத தரமான கதையை கூறியுள்ளாராம். இதுதான் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் எனவும், இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ் திருமேனியின் படங்கள் அனைத்துமே ஆக்‌ஷன் ஜானரில் தான் வெளியாகியுள்ளன. அதேபோல் ஏகே 62 படமும் தரமான ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.220 கோடி பட்ஜெட்டை லைகா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அஜித்துக்கு மட்டுமே 105 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதேபோல் மகிழ் திருமேனிக்கும் இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாம். துணிவு வெற்றியும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனும் ஏகே 62 படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் என்றே பார்க்கப்படுகிறது.

லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியான போது, இயக்குநராக விக்னேஷ் சிவனும் இசையமைப்பாளராக அனிருத்தும் மட்டுமே கமிட்டாகியிருந்தனர். இந்நிலையில், தற்போது ஏகே 62ல் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதால், அனிருத்தும் இந்தப் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்த விக்னேஷ் சிவனும் அனிருத்தும் ஏகே 62ல் இருந்து விலகியதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அனிருத்துக்கு பதிலாக தடம் படத்தின் இசையமைப்பாளர் அருண் ராஜ் ஏகே 62ல் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித் 62 படத்திற்கு வில்லனாக அருண் விஜயை கமிட் செய்து உள்ளார்களாம் இந்த தகவல் தற்போது செம்ம வைரலாகி வருகிறது .என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் செம்மயாக வில்லன் தோற்றத்தில் செமையாக கலக்கினார் .அதுமட்டும் இல்லாமல் மகிழ்திருமேனி இயக்கிய தடம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளதால் கண்டிப்பாக இருக்கக்கூடும் என கோடம்பாக்கத்தில் கிசு கிசுகப்படுகிறது

சமீபத்திய கதைகள்