விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, படம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 2022 இல் தொடங்கப்பட்டது. ஆனால் சமீபத்திய அறிக்கை அஜித் தனது 62 வது படத்தை இயக்க புதிய இயக்குனரைத் தேடி வருவதாகக் கூறுகிறது, அதே நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிக்கும் படம் ஒத்திவைக்கப்பட்டது. நடிகரின் 63வது படம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ், ‘அஜித் 62’ குறித்த ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்துள்ளார். மேலும், ‘அஜித் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர், அஜித்தின் அடுத்த படத்தை தான் இயக்குவதாக மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருந்தார் நடிகர் அஜித்குமார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பாக இருந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களில் இருந்த நிலையில் விக்னேஷ் சிவனின் கதை குப்பையாக இருந்த காரணத்தினால் அப்படத்தில் இருந்து அந்த விக்னேஷ் சிவனை அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் இருவரும் ஒருமனதாக வெளியேற்றிவிட்டு வேறு ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் சினிமா வட்டாரத்தில் மேலும் ஒரு செய்திகள் வெளியாகி உள்ளது. அதில் விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது பொய்யான தகவல் என்றும், அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படம் அது மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் என்பதால் விக்னேஷ் சிவனால் மேலும் அதிக நாட்கள் இந்த படத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதனால் பரவாயில்லை நீங்கள் இன்னும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள் அதற்குள் நான் ஒரு சிறிய படத்தில் நடித்துவிட்டு வந்துகிறேன் என்று அஜித் சொல்லிவிட்டு வேறு ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க சென்றுள்ளதாகவும், அதனால் அந்த படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் மிகப் பிரம்மாண்டமான பெரிய பட்ஜெட்டில் இயங்கக்கூடிய படத்தில் அஜித் நிச்சயம் நடிப்பார் என்கின்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டதால் தன்னுடைய இமேஜ் மிகப்பெரிய பாதிப்படையும் என்பதால் விக்னேஷ் சிவன் தன்னுடைய உதவியாளர்கள் மூலம் அஜித் படத்திலிருந்து தான் வெளியாகவில்லை, தன்னுடைய படத்தின் நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு சிறிய படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் என்று அஜித் சொன்னதாக ஒரு பொய்யான செய்தியை விக்னேஷ் சிவன் தரப்பு தான் பரப்பி வருவதாகவும், மேலும் விக்னேஷ் சிவனின் இது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்கின்றனர் சினிமா துறையைச் சேர்ந்த சிலரும்
இப்படி தொடர்ந்து விக்னேஷ் சிவன் மாத்தி மாத்தி பேசி இருப்பது அஜித்துக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே அஜித் இந்த படத்திற்கு ஜூலை 15 வரை தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் இப்பொழுது இந்த படத்திற்கு செப்டம்பர் வரைக்கும் டேட் கேட்டிருக்கிறார்.
இதனால் அஜித் இந்த படம் இப்பொழுது சரி வராது என்று விக்னேஷ் சிவனை ஒதுக்கி விட்டார். மேலும் அஜித்தின் ஏகே 62 படத்தை லைக்கா நிறுவனம் வேறு இயக்குனரிடம் கொடுத்து விட்டது. இதற்கான வேலைகள் கூடிய சீக்கிரமாக ஆரம்பித்து AK62 படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் மகிழ் திருமேனி தான் இயக்கவுள்ளார் என்றும் தீபாவளி அன்று ஏ கே 62 படமானது தீபாவளி அன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது ..!அஜித் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.