Thursday, April 18, 2024 5:37 am

அஜித் காதுக்கு சென்ற அந்த விஷயம்!! வீக்கியை AK-62 படத்திலிருந்து ஒதுக்க முக்கிய காரணமே இது தான் ? அதிர்ச்சி தகவல் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, படம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 2022 இல் தொடங்கப்பட்டது. ஆனால் சமீபத்திய அறிக்கை அஜித் தனது 62வது படத்தை இயக்க புதிய இயக்குனரைத் தேடி வருவதாகவும், அதே நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிக்கும் படம் ஒத்திவைக்கப்படுவதாகவும் கூறுகிறது.

அஜித் இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை விக்னேஷ் சிவனிடம் ஆகஸ்ட் மாதத்திலேயே கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அதற்கான ஸ்கிரிப்ட்டை சொல்லாமல் இழுத்தடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அஜித் கேட்கும் ஒவ்வொன்றிற்கும் விக்னேஷ் சிவன் ஆர்டிஸ்ட் தேர்ந்தெடுக்கும் வேலையில் பிஸியாக இருப்பதாக சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.

பிறகு அஜித்தை சமாதானப்படுத்தும் விதமாக பாதி ஸ்கிரிப்ட் மட்டும் சொல்லி இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா இவர் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அஜித்தின் ஏகே 62 படத்தை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க போவதாக வெளியிட்டனர். இதனை அறிந்த விக்னேஷ் சிவன் நேரடியாக லைக்கா நிறுவனத்திடம் சென்று தன்னை காப்பாற்றிக் கொள்ள ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்.

இவ்வளவு குளறுபடிகளை கேள்விப்பட்ட அஜித் மிகவும் அப்செட் ஆனார். ஏனென்றால் அஜித்திற்கு வருகின்ற தீபாவளி அன்று தான் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனாலே இந்த படத்திற்கான கதையைக் கேட்டு ஓகே சொல்லி இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் அதை அலட்சியமாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருவதால் அஜித்திற்கு மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி தொடர்ந்து விக்னேஷ் சிவன் மாத்தி மாத்தி பேசி இருப்பது அஜித்துக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே அஜித் இந்த படத்திற்கு ஜூலை 15 வரை தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் இப்பொழுது இந்த படத்திற்கு செப்டம்பர் வரைக்கும் டேட் கேட்டிருக்கிறார்.

இதனால் அஜித் இந்த படம் இப்பொழுது சரி வராது என்று விக்னேஷ் சிவனை ஒதுக்கி விட்டார். மேலும் அஜித்தின் ஏகே 62 படத்தை லைக்கா நிறுவனம் வேறு இயக்குனரிடம் கொடுத்து விட்டது. இதற்கான வேலைகள் கூடிய சீக்கிரமாக ஆரம்பித்து AK62 படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பைக்கில் உலக சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவார், மேலும் பிஸியான நடிகர் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்